தஞ்சாவூர்: தண்ணீர் இன்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள் – கூடுதல் நீர்திறக்க கோரிக்கை

தஞ்சாவூர்: தண்ணீர் இன்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள் – கூடுதல் நீர்திறக்க கோரிக்கை

தஞ்சை மாவட்டம் குடமுருட்டி ஆற்றில் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால், சுமார் மூவாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் காய்ந்து கரும் நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்: தண்ணீர் இன்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள் – கூடுதல் நீர்திறக்க கோரிக்கை

இதனையொட்டி, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்திற்காக திறக்கப்படும் நிலையில், காவிரியில் 2,500 கனஅடியும், வெண்ணாற்றில் 3,108 கனஅடியும், கல்லணை கால்வாயில் 2,704 கனஅடியும், கொள்ளிடத்தில் 402 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் குறைவாக திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் செல்லும் நீர், குடமுருட்டி ஆறு உள்ளிட்ட வாய்க்கால்களில் பாய்வதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்: தண்ணீர் இன்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள் – கூடுதல் நீர்திறக்க கோரிக்கை

தொடர் மணல் திருட்டினால் ஆறுகள் பள்ளமாகவும், வாய்க்கால்கள் மேடாகவும் மாறியது இதற்கு முக்கிய காரணமாக தெரிவித்துள்ள அவர்கள், இதனால் நடுக்காவேரி, மேலத்திருப்பந்துருத்தி, கண்டியூர்தெரிள்ளிட்ட பகுதிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவதாகவும், வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தண்ணீர் இன்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள் – கூடுதல் நீர்திறக்க கோரிக்கை

தொடர்ந்து, இதேநிலை நீடித்தால் அப்பகுதியில் உள்ள நெல் பயிர்கள் காய்ந்து கருகும் சூழல் ஏற்படும் என்றும், இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படும் என்றும் வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி விவசாயிகள், உடனடியாக குடமுருட்டி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து, கருகும் பயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்: தண்ணீர் இன்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள் – கூடுதல் நீர்திறக்க கோரிக்கை