163 இந்தியர்களுடன் குவைத்தில் இருந்து ஹைதராபாத் வந்த சிறப்பு ஏர் இந்தியா விமானம்

 

163 இந்தியர்களுடன் குவைத்தில் இருந்து ஹைதராபாத் வந்த சிறப்பு ஏர் இந்தியா விமானம்

163 இந்தியர்களுடன் குவைத்தில் இருந்து ஹைதராபாத் நகருக்கு சிறப்பு ஏர் இந்தியா விமானம் வந்தடைந்தது.

ஹைதராபாத்: 163 இந்தியர்களுடன் குவைத்தில் இருந்து ஹைதராபாத் நகருக்கு சிறப்பு ஏர் இந்தியா விமானம் வந்தடைந்தது.

கொரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன் ஒருகட்டமாக நேற்று 163 இந்தியர்களுடன் குவைத்தில் இருந்து ஹைதராபாத் நகருக்கு சிறப்பு ஏர் இந்தியா விமானம் வந்தடைந்தது.

குவைத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஏஐ 988 நேற்று இரவு 10.07 மணிக்கு 163 இந்திய குடிமக்களுடன் குவைத்தில் இருந்து புறப்பட்டது. பின்னர் அந்த விமானம் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

airport

வருகை தரும் பயணிகள் மற்றும் விமானக் குழுவினருக்கு வசதியாக ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் வருகையையும், ஏரோபிரிட்ஜ் முதல் வருகை வளைவு வரையிலான முழு நீளத்தையும் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டிருந்தது. பாத்ரூம்கள் உள்ளிட்ட பொதுப் பகுதிகள், நாற்காலிகள், கவுண்டர்கள், தள்ளுவண்டிகள், தண்டவாளங்கள், கதவுகள், லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்றவை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தன. ஏரோபிரிட்ஜ் முதல் விமான நிலைய முனையம் வரை பயணிகளிடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.