கோவை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை

 

கோவை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை

கோவை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (28). தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில், ஆரம்பத்தில் பணம் சம்பாதித்த மதன்குமார், பின்பு தோற்றதுடன் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

கோவை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை

இந்நிலையில், விட்ட பணத்தை மீண்டும் பிடிப்பதற்காக கடன் வாங்கி ரம்மி விளையாடிய நிலையில், அதிலும் பணத்தை இழந்ததால் மன விரக்தியில் இருந்து வந்த மதன்குமார், இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய ஆர்.எஸ்.புரம் போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதனை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..