Home க்ரைம் சாதிச்சான்றிதழுடன் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு சோழக்காட்டில் வன்கொடுமை! எப்.ஐ.ஆர். இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்

சாதிச்சான்றிதழுடன் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு சோழக்காட்டில் வன்கொடுமை! எப்.ஐ.ஆர். இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நடராஜபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 13 வயது மகள், அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன் தினம் இவர் பள்ளிக்கூடத்தில் சாதிச்சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக, சாதிச்சான்றிதழை எடுத்துக்கொண்டு வயல்வழியாக சென்றிருக்கிறார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(வயது28)எதிரே வந்திருக்கிறார். மாணவியை வலுக்கட்டாயமாக சோழக்காட்டுக்குள் தூக்கிக்கொண்டு போயிருக்கிறார். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் கடுமையாக தாக்கியிருக்கிறார் பாலமுருகன். இதில் மயக்கம் அடைந்துவிட்டார் மாணவி.

சாதிச்சான்றிதழுடன் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு சோழக்காட்டில் வன்கொடுமை! எப்.ஐ.ஆர். இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்
சாதிச்சான்றிதழுடன் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு சோழக்காட்டில் வன்கொடுமை! எப்.ஐ.ஆர். இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்

மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக இருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் கிழிந்து கிடந்த ஆடைகளை எடுத்து அணிந்துகொண்டு வீட்டுக்கு சென்றதும், தாயிடம் நடந்ததை சொல்லி அழுதிருக்கிறார்.

வெளியே சொன்னால் அவமானம் என்று நினைத்த குடும்பத்தினர் அமைதியாக இருந்துவிட்டனர். நேற்று காலையில் உடல் வலியால் மாணவி அவதிப்படுவதை கண்ட குடும்பத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கே, எப்.ஐ.ஆர். இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்று பெண் டாக்டர் கூறியதால் சர்ச்சை எழுந்தது.

திருச்சி மாவட்ட அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் வந்து டாக்டரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு சிகிச்சை அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த லால்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள், மாணவியிடம் புகாரை பெற்றுக்கொண்டு பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்.

சாதிச்சான்றிதழுடன் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு சோழக்காட்டில் வன்கொடுமை! எப்.ஐ.ஆர். இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ!!

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளது. தொற்று பாதிப்பை குறைக்க மத்திய , மாநில அரசுகள் முயற்சி எடுத்து வரும் நிலையில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து...

நான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை… மாஜி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கதறல்

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நாஞ்சில் முருகேசன். முன்னாள் எம்எல்ஏவான இவர்மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு...

எம்.பி. முந்திரி ஆலையில் கொலை: ஜிப்மரில் உடற்கூறாய்வு செய்ய கோரிக்கை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் உள்ள டி.ஆர்.வி. காயத்ரி முந்திரி ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறார்.இந்த...
TopTamilNews