நாகை: கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா கோலாகலம்

நாகை: கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா கோலாகலம்

நாகை அருகேயுள்ள கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில், 18 சித்தர்களில் முதன்மை சித்தரான, கோரக்க சித்தர் கோயில் அமைந்துள்ளது.

நாகை: கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா கோலாகலம்

கோரக்க சித்தர், போகரின் அறிவுரைப்படி நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார். இதனையொட்டி, ஐப்பசி பௌர்ணமி பரணி விழா அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை: கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா கோலாகலம்

இதற்காக கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோரக்க சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாகை: கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா கோலாகலம்

இறுதியாக மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோரக்கர் சித்தரை வழிபட்டு சென்றனர்.

நாகை: கோரக்க சித்தர் கோயிலில் ஐப்பசி பரணி விழா கோலாகலம்