Home அரசியல் போன பிறவியில் ரஜினி தமிழ்நாட்டில் வீரத்தளபதியாக வாழ்ந்து நாட்டுக்காக உயிர் கொடுத்தவர்.. பரபரப்பூட்டுகிறார் பிரபல ஜோதிடர்

போன பிறவியில் ரஜினி தமிழ்நாட்டில் வீரத்தளபதியாக வாழ்ந்து நாட்டுக்காக உயிர் கொடுத்தவர்.. பரபரப்பூட்டுகிறார் பிரபல ஜோதிடர்

ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற பேச்சு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வந்தாலும், அது நிறைவு கட்டத்தை எட்டியிருக்கிறது. தனது முடிவினை ரஜினி விரைவில் சொல்ல இருக்கிறார். அரசியலுக்கு வரமாட்டேன் என்றே ரஜினி சொல்லப்போகிறார் என்று பரவலான பேச்சு இருக்கும் நிலையில், ரஜினியின் ஜாதக அடிப்படையில் அதுதான் அமையும் என்று பிரபல ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியனும் சொல்கிறார்.

அவர் மேலும் சொல்லும் ஒரு செய்திதான் பரபரப்பை ஆச்சரியமளிக்கிறது. போன பிறவியில் தமிழ்நாட்டில் வீரத்தளபதியாக வாழ்ந்து நாட்டுக்காக உயிர் கொடுத்தவர் ரஜினி என்று சொல்கிறார்.

இது குறித்து ரஜினியின் ஜாதகத்தினை கணித்து, அதாவது வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணித்து அவர் சொல்லியிருப்பதாவது:

’’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்,12-12-1950 வருடம் பெங்களூரில் பிறந்தவர்.அதாவது விக்ருதி வருடம்,கார்த்திகை மாதம்,27-ந்தேதி செவ்வாய் அதிகாலை வேளை பிறந்தவர்.

சிம்ம லக்கினம், திருவோணம் நட்சத்திரம், மகர ராசி. இவர் ஜாதகத்தின் முதல் சிறப்பு என்னவென்றால் 4,9 க்கு உடைய செவ்வாய் உச்சம். பாக்கியாதிபதி உச்சம் பெற்றதால், இவருக்கு அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். 5க்கு 5-மாதிபதி செவ்வாய் உச்சமாக இருப்பதால் போன பிறவியில் தமிழ்நாட்டில் வீரத்தளபதியாக வாழ்ந்து நாட்டுக்காக உயிர் கொடுத்தவர்.

லக்கினத்தில் ஞானக்கிரகம் கேது இருப்பதால்,இயற்கையிலேயெ ஞானம்,அறிவு,எதிராளியின் மனம் அறிதல் போன்றவை கிடைக்கும். 7-ல் ராகு இருப்பதால் காதல் திருமணம் நடந்தது. குரு இணைவு சிறந்த மனைவியை கொடுத்தது. இருந்தாலும் ராகு, குரு இணைவு புத்திர தோசத்தை கொடுத்து ஆண் வாரிசை கொடுக்கவில்லை. 7-மிடத்திற்குறிய சனி இரண்டில் இருப்பதால் மனைவி வருகைக்கு பிறகு செல்வம்,செல்வாக்கை கொடுத்தது. இருந்தாலும் அவர் ஆறாமாதியாக இருப்பதால் இவர் பேச்சு சில நேரத்தில் இவருக்கு எதிராக அமையும்.

4-ல் சூரியன் அரசாங்க செல்வாக்கை கொடுக்கும். சந்திரனும், செவ்வாய் இணைவு சந்திர மங்கல யோகத்தை கொடுத்தது. ஏகப்பட்ட நிலம், கட்டிடம் அமையும். இருந்தாலும் மனதுக்காரகன் ஆகிய சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்து 6-மிடத்தில் இருப்பதால் சில நேரங்களின் மனச்சிதவை உண்டு செய்யும். ஆனால் 12-க்குறிய சந்திரன் 6-மிடத்தில் இருப்பதால் விபரீத ராஜயோகமாகும்.

5-ல் சுக்கிரன்,புதன் இணைவு மகாலெட்சுமி யோகத்தை கொடுத்து பெருமாளின் அருள் கிடைக்கும்.மகாலெட்சுமிபோல் மனைவி கிடைத்தது.குரு வீட்டீல் இருந்து,அந்த குரு ராகுவுடன் சேர்ந்ததால் வேறு சமுதாயத்தில் மனைவி அமைந்தது.

சிம்ம லக்கினமாகி,லக்கினாதிபதி சூரியன் கேந்திரம் பெற்று வலுவாக இருப்பதால்.சூரிய காரகன் சிவன் அருள் எப்பொழுதும் உண்டு.கால சர்ப்ப தோசம் ஜாதகம்.இதை யோகம் என்றும் சொல்லலாம். இந்த அமைப்பு உள்ள ஜாதகர் 36 வயதுக்கு மேல் வெற்றிகொடி நாட்டுவார்கள்.

அரசியலுக்கு உகந்த கிரகம் செவ்வாய், சூரியன் வலுவாக இருப்பதால் அரசியல் சம்பந்தம் ஏற்பட்டாலும்,லக்கினத்தில் கேது இருப்பதாலெதிலும் அதிக பற்று இருக்காது. பதவி,பணம்,புகழ்,புகழ்ச்சி இதற்கு மயங்க மாட்டார். அதனால் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டார்.’’

மாவட்ட செய்திகள்

Most Popular

பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு...

எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் மலரச்செய்வார் ரஜினி… சைதை துரைசாமி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ’’ஆன்மீகத்தையும் அரசியலையும் தனியாக பார்க்க வேண்டும்....

ரஜினியின் கட்சியில் குடும்ப அரசியல் இருக்குமா?

1995 ஆம் ஆண்டு ரஜினி காந்த் நடித்து வெளியான ‘பாட்ஷா’ படத்தின் வெற்றி விழாவில் தொடங்கிய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருக்கிறது. ஆமாம். பாட்ஷா பட விழாவில்தான் ஆளும் அதிமுகவை எதிர்த்து...

ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்றால் எடப்பாடி பழனிசாமி அரசாணை நாயகன் – கனிமொழி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக மகளிா் அணி மாநில செயலாளார் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கனிமொழி, “நாளைக்கு தோ்தல் வைத்தாலும்...
Do NOT follow this link or you will be banned from the site!