இது ரொம்ப கடினமான ஆட்டம்;.உங்களுக்கு இது வேண்டாம் – ரஜினிக்கு சொல்லும் சீமான்

 

இது ரொம்ப கடினமான ஆட்டம்;.உங்களுக்கு இது வேண்டாம் – ரஜினிக்கு சொல்லும் சீமான்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு எழுந்ததுமே, இனியும் வேற்று மொழிக்காரர் எங்கள் மண்ணை ஆள அனுமதிக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் ஆனால் முதல்வர் ஆவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இயக்குநர் பாரதிராஜாவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இது ரொம்ப கடினமான ஆட்டம்;.உங்களுக்கு இது வேண்டாம் – ரஜினிக்கு சொல்லும் சீமான்

அப்படியானால் ரஜினி அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக முதல்வர் ஆகிவிடுவாரா என்றே இந்த எதிர்ப்புகளின் மூலமாக கேள்வி எழுந்தது. ஆனாலும், ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் கட்சி ஆரம்பிப்பேன். ஆனால் முதல்வர் வேட்பாளராக நான் இருக்க மாட்டேன் என்று கூறியதால், சீமான், பாரதிராஜாவின் எதிர்ப்பலைகள் அடங்கின.

இது ரொம்ப கடினமான ஆட்டம்;.உங்களுக்கு இது வேண்டாம் – ரஜினிக்கு சொல்லும் சீமான்

தற்போது உடல்நிலை காரணத்தினால் கட்சியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருகிறார் ரஜினி. முறைப்படி இதை அவர் அறிவிக்காத நிலையில்,

’’ரஜினிகாந்த் நிம்மதியான, அமைதியான சூழலில் வாழ வேண்டும்.

இது ரொம்ப கடினமான ஆட்டம். உங்களுக்கு இது வேண்டாம். உங்கள் கருத்துக்களை எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் செயல்படுத்துகிறோம்.

உடல்நலம் கருதி நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம்’’என்று தெரிவித்துள்ளார் சீமான்.