அரசாணை வெளியிட்ட முதல்வர்! நன்றி தெரிவிக்கும் மாணவர்கள்

 

அரசாணை வெளியிட்ட முதல்வர்! நன்றி தெரிவிக்கும் மாணவர்கள்

கல்லூரி மாணவர்களின் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெருவர் என முதல்வர் அறிவித்திருந்தார். இதன் மூலம் தமிழக மாணவர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று மாணவர்களின் ஹீரோவாக முதல்வர் எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார்.

அரசாணை வெளியிட்ட முதல்வர்! நன்றி தெரிவிக்கும் மாணவர்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதன் நீட்சியாக தமிழக முதல்வரும், தமிழக அமைச்சர்களும், தமிழக ஆளுநருக்கு, இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று ஆளுநரும் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டார் முதல்வர்.

தமிழக முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டதன் மூலம்,”மாணவர்களே நாட்டின் வருங்கால தூண்கள்; அவர்களின் நலன் காப்பது ஒரு தலைவனின் தலையாய கடமை” என்பதற்குச் சான்றாக விளங்கி வரும் முதல்வருக்கு, மாணவர்கள் மட்டுமல்லாது, தமிழர்கள் அனைவரும் தங்களது மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியினையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.