நீங்க வாங்க ரஜினி.. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் ..போயஸ்கார்டனில் குவி்யும் இளைஞர்கள்

 

நீங்க வாங்க ரஜினி.. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் ..போயஸ்கார்டனில் குவி்யும் இளைஞர்கள்

உடல்நிலையை கருதி ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை தள்ளிப்போட்டிருக்கிறார். ரஜினியின் உடல் ஆரோக்கியம்தான் முக்கியம். அதனால் அவர் இப்போது கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இல்லை என்பதை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணனும் நேற்று தெரிவித்திருந்தார்.

நீங்க வாங்க ரஜினி.. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் ..போயஸ்கார்டனில் குவி்யும் இளைஞர்கள்

கொரோனாவுக்கு முன்னர் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முடிவில் உறுதியாக இருந்ததாகவும், கொரோனா தொற்றில் உடல்நிலையை சமாளிக்க முடியாது என்று மருத்துவர்கள் அறிவிறுத்தியதால்தான் கட்சி ஆரம்பிக்கும் நிலையில் இப்போது ரஜினி இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருந்தார்.
ஆனாலும் ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி இப்போதும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

நீங்க வாங்க ரஜினி.. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் ..போயஸ்கார்டனில் குவி்யும் இளைஞர்கள்

‘’நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான். ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்’’ என்றும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மாற்றத்தை விரும்பும் மக்கள் என்று ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டுக்கு போகும் வழியெங்கும் போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள்.

நீங்க வாங்க ரஜினி.. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் ..போயஸ்கார்டனில் குவி்யும் இளைஞர்கள்

‘’தலைவரும் நீயே முதல்வரும் நீயே’’ என்று வாசகம் போட்ட டீ சர்ட்டுடன் ரஜினி வீட்டு முன்பாக இளைஞர்கள் குவிந்துள்ளனர்.

இதனால் போயஸ் கார்டன் ஏரியாவில் பரபரப்பு நிலவுகிறது.