Home அரசியல் அப்ப ஆண்டவன் கையில... இப்ப மக்கள் கையில... ரஜினி அடித்த சூப்பர் பல்டி

அப்ப ஆண்டவன் கையில… இப்ப மக்கள் கையில… ரஜினி அடித்த சூப்பர் பல்டி

அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை சுற்றி வளைத்து ரஜினி சொல்லி இருப்பதாக அவர் பெயரில் அறிக்கை என்று பரபரப்பாக உலவி வந்தது.

அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா?என்று இத்தனை காலம் யோசித்துக்கொண்டிருந்த மாதிரி, எழுதிய இந்த அறிக்கையையும் வெளியிடாமல் காலம் கடத்தி வந்த நிலையில், யாரோ ஒருவர் ஆத்திரத்தில் வெளியிட்டு விட்டதாகவே பேசப்படுகிறது.

அந்த அறிக்கை என்னுடையது இல்லை. ஆனால், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை பற்றிதெரிவிப்பதாக இன்று டுவிட்டர் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

முழுக்க முழுக்க நனைந்த பின்னரும் இவர் முக்காடு போட்டுக்கொள்ள பார்க்கிறாரே. அது அவரோட அறிக்கைதான் என்றே பலரும் பேசி வருகின்றார்கள்.

இந்தா இந்தா என்று முப்பது வருசத்துக்கு மேல இழுத்தடிச்சிக்கிட்டு இருந்த ரஜினியும் ஒரு முடிவுக்கு வந்துட்டார். அதைத்தான் அவரோட அண்ணன் சத்யநாராயணனும், கொரோவுக்கு முன்னாடி கட்சி ஆரம்பிக்கிறதுல உறுதியா இருந்தார். ஆனா, கொரோனாவுனால மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அதனால் அவருக்கு உடல்நலம்தான் முக்கியம் என்று ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.

(அந்த அறிக்கை உண்மைதான் என்றே பலரும் சொல்வதால்….)

அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழும்போதெல்லாம், ‘’அது ஆண்டவன் கையில் இருக்குது’’ என்று சொல்லி வந்த ரஜினி, ‘’என் உடல் நலத்தில் அக்கறையுள்ள, என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்கச்சொன்னாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’’என்று இப்ப மட்டும் மக்கள் கையில் விட்டிருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றார்கள்.

இத்தனை நாளும் ரஜினி கைகளை மேலே உயர்த்தி காட்டிவிட்டு(அது ஆண்டவன் கையில் இருக்குது) இப்ப மட்டும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சூப்பர் பல்டி அடித்துள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வியாபாரம் சூப்பர்…. ஆனால் ஒரு வருஷத்துல ரூ.3,150 கோடி நஷ்டம்.. பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்தின் வேதனை

பிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.3,150.6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளிப்கார்ட் இந்தியா நிறுவனம் தனது...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பா.ஜ.க. அரசின் மிஷன் சக்தி தோல்வி.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மிஷன் சக்தி திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு… பா.ஜ.க அரசை சாடிய ராகுல் காந்தி

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு என்று பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை.. இது வெளிப்படையான போட்டி.. தாக்கரேவுக்கு குட்டு வைத்த யோகி ஆதித்யநாத்

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை, இது வெளிப்படையான போட்டி என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். உத்தர...
Do NOT follow this link or you will be banned from the site!