Home அரசியல் மாப்பிள்ளை அவருதான்; ஆனா சட்டை என்னுடையது : கலாய்ப்பு க்குள்ளாகும் ரஜினியின் அறிக்கை

மாப்பிள்ளை அவருதான்; ஆனா சட்டை என்னுடையது : கலாய்ப்பு க்குள்ளாகும் ரஜினியின் அறிக்கை

உடல் நிலையை கவனத்தில்கொண்டுதான் அண்ணாத்த படத்தின் ஷூடிட்ங்கில் பங்கேற்பதையே தள்ளி போட்டுக்கொண்டே இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நேரத்தில் தேர்தல் வேறு நெருங்கிவிட்டதால், அரசியல் பிரவேசம் குறித்த முடிவை தெளிவுபடுத்த வேண்டிய நெருக்கடியும் அதிகமாகிகொண்டே இருந்தது.

கொரோனா அச்சத்தால் 300 பேர் பங்கேற்கும் ஷூட்டிங்கில் பங்கேற்க தயங்கும் ரஜினி, எப்படி பல்லாயிரக்காணக்கான மக்கள் குவியும் பிரச்சாரத்தில் எல்லாம் பங்கேற்பார். பொதுவாகவே கூட்டமுன்னாலே ரஜினிக்கு அலர்ஜி. அதனால் அவரோட அரசியல் பிரவேசத்திற்கு வாய்ப்பே இல்லை என்ற பேச்சு இருந்த சமயத்தில், ரஜினியின் அறிக்கை என்று இணையத்தில் உலவியது.

Rajini kanth

அந்த அறிக்கையில், என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துதான் எனக்கு கவலை. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து இடையில் என் உடல் நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும். நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பிரச்சனையும் தொடரும்நிலையில், கடைசி நேரத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது என்னை எதிர்பார்ப்போருக்கு மிகுந்த ஏமாற்றத்தைஅளிக்கும் என்று, தான் அரசியலுக்கு வரவில்ல என்பதை சுற்றி வளைத்து சொல்லி இருந்தார்.

இந்த அறிக்கையை ரஜினி எழுதி வைத்து, அதை வெளியிடுவதா வேண்டாமா என்று யோசித்திருந்த வேளையில், யாரோ ஒருவர் வெளியிட்டுவிட்டார் என்று தகவல் பரவியது.


இந்நிலையில் இன்று ரஜினியே, அந்த அறிக்கை நான் எழுதியது இல்லை. ஆனால், அதில் இருக்கும் தகவல்கள் உண்மையே என்று சொல்லியிருக்கிறார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், அவரின் படையப்பா படத்தோட மாஸ் காமெடியான, ‘’மாப்பிள்ளை அவருதான்; ஆனா, அவரு போட்டிருக்குற சட்டை என்னோடது’’ன்னு சொல்லி கலாய்க்கிறாங்க.

மாவட்ட செய்திகள்

Most Popular

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. பா.ஜ.க. அரசின் மிஷன் சக்தி தோல்வி.. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மிஷன் சக்தி திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு… பா.ஜ.க அரசை சாடிய ராகுல் காந்தி

பொய், கொள்ளை மற்றும் முதலாளி சேவக அரசு என்று பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை.. இது வெளிப்படையான போட்டி.. தாக்கரேவுக்கு குட்டு வைத்த யோகி ஆதித்யநாத்

யாரும் எதையும் எடுத்து செல்வதில்லை, இது வெளிப்படையான போட்டி என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். உத்தர...

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. பேமஸ்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரபலம் (பேமஸ்) என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா...
Do NOT follow this link or you will be banned from the site!