Home தமிழகம் நாளைக்கு கடை லீவு! கட்டி ஏறும் பிரியர்கள் கூட்டம்

நாளைக்கு கடை லீவு! கட்டி ஏறும் பிரியர்கள் கூட்டம்

ஒரு வாராத்துக்கு சாப்பாடு இல்லேன்னாலும் சமாளிச்சுடுவாங்க போலிருக்குது. ஆனா, ஒரு நாளைக்கு கடை இல்லேன்னா தவிச்சு போயிடுறாங்க மது பிரியர்கள். அவுங்ககிட்ட நாளைக்கு கடை லீவுன்னு சொன்னா என்ன செய்வாங்க. டாஸ்மாக் கடைகளில் முண்டியடிக்கிறாங்க. ஒவ்வொருத்தர் கையிலும் நாலைஞ்சு பாட்டில் இருக்கிறத பார்த்துட்டு, இன்னும் சில பேர் பெட்டியோடு போறத பார்த்துட்டு, ஒரு நாளைக்குத்தானய்யா லீவு. ஒரு மாசம் லீவு விட்ட மாதிரி இப்படி அள்ளுறீங்களேன்னு கமெண்ட் அடிக்கிற அளவுக்கு மக்கள் வாரிட்டு போறாங்க.

அது சரி, நாளைக்கு எதுக்கு கடை லீவுங்குற விசயத்துக்கு வருவோம். நாளை மிலாது நபி. அதனால, மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் நாளை 30-ம் தேதி வெள்ளி கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று நேற்றைய தினமே சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு முன்கூட்டியே விசயம் தெரிஞ்சிட்டதால உஷாராகி, முன்கூட்டியே ரெடியாகித்தான் சிலர் வாங்கி ஸ்டாக் வச்சிட்டாங்க.

எல்லோருக்குமா முன்கூட்டியே தெரியுது. லேட்டா விசயத்த கேள்விப்பட்டவங்க என்ன செய்யுவாங்க… இன்னைக்கு ஈவ்னிங் கடையில கட்டி ஏறுது பிரியர்கள் கூட்டம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்; 172 பேருக்கும் அஞ்சலி

29.11.2017 இரவில் வீசிய அந்த ஒக்கி புயலின் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை கன்னியாகுமரி. 172 உயிர்களை காவு வாங்கிய அந்த சோகத்தில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தேனி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி...

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர்...

விஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!