நீட் தேர்வு: அரசு பயிற்சி மையங்களில் படித்த 1,615 பேர் தேர்ச்சி

 

நீட் தேர்வு: அரசு பயிற்சி மையங்களில் படித்த 1,615 பேர் தேர்ச்சி

அரசு பயிற்சி மையங்களில் படித்த 1,615 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இதில் குளறுபடி இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்த பட்டியல் நீக்கப்பட்டு இன்று காலை வேறு பட்டியல் வெளியானது. இந்த தேர்வை தமிழகத்தில் 99,610 மாணவர்கள் எதிர்கொண்ட நிலையில், 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 57.04% ஆக இருக்கிறது. அதிக தேர்ச்சி பட்டியலில் தமிழகம் 5ம் இடத்தை பிடித்திருப்பதாக தேர்வு முகமை அறிவித்திருந்தது.

நீட் தேர்வு: அரசு பயிற்சி மையங்களில் படித்த 1,615 பேர் தேர்ச்சி

இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழகத்தில் அரசு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1,615 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பயிற்சி மையங்களில் படித்த 6,692 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அங்கு பயிற்சி பெற்றதில்ல், கோவை அரசு பள்ளி மாணவி வாசுகி 580 மதிப்பெண்கள் பிடித்து தகுதி பெற்றிருக்கிறார். மேலும், அரசு மையங்களில் படித்த 4 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.