‘’சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடுகள் செய்து பயன்பெறுங்கள்’’- உலக சிக்கன நாளில் வலியுறுத்தும் ஆட்சியர் சி.கதிவரன்

 

‘’சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடுகள் செய்து பயன்பெறுங்கள்’’- உலக சிக்கன நாளில் வலியுறுத்தும் ஆட்சியர் சி.கதிவரன்

‘’சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடுகள் செய்து பயன்பெறுங்கள்’’- உலக சிக்கன நாளில் வலியுறுத்தும் ஆட்சியர் சி.கதிவரன்வீடும், நாடும் செழித்து ஓங்க, நாம் அனைவரும் இந்திய அரசின் பாதுகாப்பான தபால் அலுவலகங்களில் செயல்படும் அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடுகள் செய்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தி உள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன்.உலக சிக்கன நாளை முன்னிட்டு அவர் மேலும் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:‘சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நம் நாட்டில் ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன நாள கொண்டாடப்படுகிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானத்தில் ஒரு பகுதியினை திட்டமிட்டு சேமிக்க வேண்டும். மேலும், எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கும் சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘’சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடுகள் செய்து பயன்பெறுங்கள்’’- உலக சிக்கன நாளில் வலியுறுத்தும் ஆட்சியர் சி.கதிவரன்

நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன. நாம் உண்ணும் உணவு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்காத அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறுநீர்த்துளிகள் இணைந்து தாகம் தீர்க்கும்
அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்று தான் சேமிப்பும், சிறு சிறு தொகைகள் இணைந்து, சிலகாலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு உதவுகிறது. சேமிப்பு செய்வதற்கான எளிய முதல் படி குடும்பத்துக்கான அன்றாடம் வரவு செலவு கணக்குகளை எழுதி, ஆராய்வது. இதனால், நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தின் பொருளாதார நிலையை அறிந்து கொள்வதால், செலவுகள் நெறிபடும்.மேலும், பல நேரங்களில் பயனற்ற செலவுகள் கண்டறிந்து தவிர்க்கவும் இயலும். அதனால், நாம் சேமிப்பை முதலில் நம் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

‘’சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடுகள் செய்து பயன்பெறுங்கள்’’- உலக சிக்கன நாளில் வலியுறுத்தும் ஆட்சியர் சி.கதிவரன்

அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்து இந்த சேமிப்பு பழக்கம் தான். அதேபோல, எதிர்கால செலவுகளை திட்டமிடுவதும் சேமிப்பின் இன்னொரு வகை தான். நமது எதிர்கால செலவுகளான குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடுகட்டுதல், ஓய்வு கால செலவுக்கு பணம் ஆகியவை ஒவ்வொருவர் வாழ்விலும் கட்டாயம் சந்திக்க உள்ள செலவினங்களே ஆகும். இதனை முன்னதாக ஆராய்ந்து, நம் வருவாயைக் கூட்ட வேண்டிய தருணங்களையும், அதற்கான வேலை வாய்ப்புகளையும் கண்டறிந்து,
அதற்கேற்றவாறு உழைத்து பொருளீட்டி அதனைப் பாதுகாப்பாக சேமித்தால் சமூகத்தில் சீரோடும் சிறப்போடும் வாழலாம்.

எனவே, இந்த நிதர்சனமான உண்மையை புரிந்து கொண்டு நம் வீடும் நாடும் செழித்து ஓங்க, நாம் அனைவரும் இந்திய அரசின் பாதுகாப்பான தபால் அலுவலகங்களில் செயல்படும் அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடுகள் செய்து பயன்பெற “உலக சிக்கன நாள்” வாழ்த்துச் செய்தி வாயிலாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.