‘பா.ம.க’வை உடைக்கும் ‘தி.மு.க’ – தேர்தல் களம் காணப்போகும் ‘அதிரடி’கள்

 

‘பா.ம.க’வை உடைக்கும் ‘தி.மு.க’ – தேர்தல் களம் காணப்போகும் ‘அதிரடி’கள்

தமிழக தேர்தல் மிக அருகில் நெருங்கி விட்ட நிலையில், கூட்டணி விஷயத்தில் தி.மு.க ரொம்பவே குழம்பிய நிலையில் உள்ளது.காங், கம்யூ, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் சமாதானப் போக்கை கையாண்டு வரும் நிலையில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் திமுகவிற்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.மிகக் குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படுவதாலும், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேன்டும் என்ற உத்தரவையும் திருமா ஏற்பதாக இல்லை. கிட்டத்தட்ட மதிமுகவும் இதே நிலையில்தான் இருக்கிறது.

‘பா.ம.க’வை உடைக்கும் ‘தி.மு.க’ – தேர்தல் களம் காணப்போகும் ‘அதிரடி’கள்


இதற்குப் பதிலாக பாமகவை கூட்டணி சேர்க்கலாம் என்று முடிவெடுத்தால் அன்புமணி ராமதாசுக்கு துணை முதல்வர் பதவி கேட்பதால் அந்தக் கூட்டணிக்கும் திமுக விரும்ப வில்லை.இதனால் திமுக மேலிடம் அதிரடியான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.பாமக., விடுதலை சிறுத்தைகள் என இருவருக்கும் கூட்டணியில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.விடுதலை சிறுதைத்தைகளைச் சேர்த்தால் வன்னியர்கள் ஓட்டுக்கள் பாதிக்கப்படும். பாமகவை சேர்த்தால் தலித் ஓட்டுக்கள் பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவு எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

‘பா.ம.க’வை உடைக்கும் ‘தி.மு.க’ – தேர்தல் களம் காணப்போகும் ‘அதிரடி’கள்


இதற்குப் பதிலாக ஒரு ‘மெகா’ திட்டத்தை திமுக வரைந்துள்ளது. வன்னியர் சமுதாயத்தில் மிகப் பிரபலமானவர் காடுவெட்டி குரு. இவர் வன்னியர் சங்கத்தில் முன்னாள் தலைவராக இருந்தவர்,எம்.எல்.ஏ வாகவும் பணியாற்றியவர். அவரது மகன் கலையரசன் தற்போது ‘மஞ்சள்படை’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதே போல் வன்னியர் கூட்டமைப்புக்கு சி.என்.ராமமூர்த்தி தலைவராக இருந்து வருகிறார்.

இவர்களையும் வன்னியர் முன்னேற்ற சங்கம், வன்னிய அடிகளார் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளையும் திமுகவுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் வன்னியர்களின் பெரும் பாலான ஓட்டுக்களைப் பெற முடியும் என திமுக திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் பல மாவட்டங்களில் உள்ள வன்னியர்களின் தனிப்பட்ட அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகள் ஆகி வருகின்றன..இதே போல் தலித் மக்களின் ஓட்டுக்களைப் பெறவும் அந்தந்தப் பகுதி அமைப்புகளூடன் பேச்சு நடத்தவும் ஏற்பாடாகி வருகிறது. சிறு, சிறு அமைப்பில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் கிடைக்கும் ஓட்டுக்கள் மிக நம்பிக்கையானவையாக இருக்கும் என்ற கணக்கில் உள்ளது திமுக மேலிடம்.

சுபாஷ் சந்திரபோஸ்