”கிளவுட் கேமிங் சேவை – ஃபேஸ்புக் அறிமுகம்” !

 

”கிளவுட் கேமிங் சேவை – ஃபேஸ்புக் அறிமுகம்” !

இனி முகநூல் செயலியிலிருந்து நீங்கள் சில கேம்ஸ்களை விளையாடி குதூகலிக்க முடியும். இதற்காக கிளவுட் கேமிங் சேவையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.கேமிங் விளையாட்டுக்கென தனியாக சாதனம் எதையும் வாங்காமல், தனியாக செயலி எதையும் தங்களுடைய சாதனத்தில் பதவிறக்காமல், ஏற்கனவே உள்ள அதற்கான செயலியில், எங்கோ செயல்படும் சர்வரில் உள்ள மெமரியை பயன்படுத்தி, ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவதை தான் கிளவுட் கேமிங் என்கிறார்கள்.

”கிளவுட் கேமிங் சேவை – ஃபேஸ்புக் அறிமுகம்” !

அதாவது இந்த கேம்ஸ்களை விளையாட உங்கள் கணிணி உள்ளிட்ட சாதனங்களில் அதற்கான ஹார்ட்வேரோ அல்லது மெமரியோ அல்லது அதை சேமித்து வைக்க வேண்டிய அவசியமோ இருக்காது. சிறந்த இன்டெர்நெட் இணைப்பு மட்டுமே இருந்தால் ஆன்லைன் கேமிங் விளையாட போதுமானது. இந்த முறை கேமிங் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த கிளவுட் கேமிங் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”கிளவுட் கேமிங் சேவை – ஃபேஸ்புக் அறிமுகம்” !

மேலும் கேமிங் பிரியர்களை கவரும் வகையில் சில கேம்ஸ்களையும் அறிமுகப்படுத்தி உள்ள பேஸ்புக் நிறுவனம், இந்த சேவை ஆண்டிராய்ட் மற்றும் பேஸ்புக்கின் வெப் வெர்சனில் மட்டுமே கிடைக்கும் என்றும் ஆப்பிளின் ஐஒஎஸ் இயங்குதளத்தில் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்