செல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு!

 

செல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு!

கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு. சங்கு என்றாலே, புனிதமானது, தெய்வீகமானது. நீரிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருள்களும் புனிதமானவை என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. தேவர்களும்,அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்றுதான் சங்கு என்பது ஐதீகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை ‘இடம்புரிச் சங்கு’. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும்.

செல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு!

இரண்டாம் வகை, ‘வலம்புரி’. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மை பெறுகிறது. மூன்றாவது ‘சலஞ்சலம்’ சங்கு. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் சங்கு கிடைக்கும். இது, அபூர்வ வகை. நான்காவது ‘பாஞ்சஜன்யம்’. இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும். பாரதப்போரில் அர்ஜூனனின் தேரோட்டியாக வந்த கிருஷ்ணபகவான் ஊதிய சங்கே பாஞ்சஜன்யம் சங்காகும். பகவான் கிருஷ்ணரின் கையில் சக்கரத்தோடு இந்த சங்கும் எப்போதும் இருக்கும்.

செல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு!

மங்கலச் சடங்குகளின்போதும் அமங்கலச் சடங்குகளின்போதும் சங்கின் பயன்பாடு தவிர்க்க இயலாதது. மேலும், சங்கின் ஒலி கெட்டவற்றை நீக்கி நன்மையைக் கூட்டும் என்பதும் நம்பிக்கை.யார் ஒருவர் வீட்டில் இச்சங்கை அலங்காரப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்தாலும், செல்வத்தை வாரி வழங்ககுடியவர்களான குபேரனும், மகாலட்சுமியும் நித்திய வாசம் செய்து வறுமையை போக்கி செழிப்படைய செய்வர் என்பது நம்பிக்கை.

செல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு!

வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது. வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

செல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு!

சங்கை காலியாக வைக்கக்கூடாது. வெறும் சங்கு இருந்தால், அந்த சங்கில் அரிசியோ அல்லது தண்ணீரோ ஊற்றி வைக்க வேண்டும். சங்கில் எதுவும் போடாமல் இருக்கும் பட்சத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அதற்கு தினமும் பசும்பால் அபிஷேகம் செய்து, பூஜை செய்து வந்தால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கியிருப்பாள் என்பது உறுதி.

-வித்யா ராஜா