”வட்டிக்கு வட்டி – சீக்கிரம் திருப்பி கொடுங்க”! நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

 

”வட்டிக்கு வட்டி – சீக்கிரம் திருப்பி கொடுங்க”! நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி விதிக்கப்படாது என்ற அரசின் அறிவிப்பை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிதி நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் கடன் பெற்று தவணையை செலுத்த முடியாமல் ஒத்திவைப்பு சலுகையை பெறுபவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ரூ. 2 கோடி வரை கடன் வாங்கியவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

”வட்டிக்கு வட்டி – சீக்கிரம் திருப்பி கொடுங்க”! நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிகாரப்பூர்வமாக அந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதாவது கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஆறு மாத காலத்திற்குள் கடன் பெற்று தவணையை தாமதமாக செலுத்துவதற்கு ஒத்திவைப்பு சலுகை பெற்றிருந்தாலும் அவர்களின் வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று அறிவித்தது. மேலும் கடன் பெற்று தவணையை செலுத்தியிருந்து, அவர்களின் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டு இருந்தால் , அதையும் நவம்பர் 5ம் தேதிக்குள் அவர்களின் கணக்கில் செலுத்திட வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

”வட்டிக்கு வட்டி – சீக்கிரம் திருப்பி கொடுங்க”! நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

இந்த நிலையில், இந்த உத்தரவை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து கடன் அளிக்கும் நிதி நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு வலியுறுத்திய படி நவம்பர் 5ம் தேதிக்குள் வட்டிதொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் திருப்பி செலுத்திவிட வேண்டும் என ரிசர்வ் வங்கி அந்த உத்தரவில் மேலும் வலியுறுத்தி உள்ளது.

எஸ். முத்துக்குமார்