Home அரசியல் சொகுசு விடுதி ஏன்? குஷ்புவின் கைதில் எழும் சர்ச்சை

சொகுசு விடுதி ஏன்? குஷ்புவின் கைதில் எழும் சர்ச்சை

கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்படாமல் குஷ்புவை சொகுசு விடுதியில் தங்க வைத்தது ஏன்? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. திருமாளவனின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான குஷ்புவின் கைதிலும் சர்ச்சை எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மனுதர்மம் எனும் சனாதன நூலில் இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என்று சிதம்பரம் தொகுதி எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பேசியிருந்தார்.

மனுதர்மத்தில் பெண்களை பற்றி உயர்வான சொல்லி இருக்கும் பக்கங்களை கருத்துக்களை விட்டுவிட்டு, மாறுபட்டு சொல்லி இருக்கும் பக்கங்களில் உ ள்ளதை வைத்துக்கொண்டு பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவனுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாஜகவின் மகளிர் அணியினர் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமாவளவனின் சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ய குஷ்பு அனுமதி கேட்டிருந்தார். ஆனால், காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக குஷ்பு இன்று காலையில் கார் மூலமாக சிதம்பரம் நோக்கி சென்றார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் ஏடிஎஸ்பி சுந்தரவதனம் த் தலைமியிலான போலீசார் முட்டுக்காடு அருகே குஷ்புவின் காரினை வழிமறித்து அவரை கைது செய்தனர். அங்கிருந்து காரில் அழைத்துச்செல்லப்பட்ட குஷ்புவை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்தனர். இது தெரிந்த விசிகவினர் விடுதி முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாஜகவினர் அங்கே வந்தனர். அவர்கள் வந்ததும் விடுதியின் வெளிப்புற தரையில் அமர்ந்த குஷ்பு, திருமாளவனுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவர்களுடன் அங்கு வந்த பாஜகவினரும் தரையில் அமர்ந்து முழக்கம் எழுப்பினர்.

முன்கூட்டியே குஷ்புவை கைது செய்தது குறித்த கேள்விக்கு, ‘’சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றுதான் முன் கூட்டியே குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார்’’என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, கைது செய்யப்பட்ட குஷ்பு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதுதான் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

பொதுவாகவே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கல்யாண மண்டபங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் அடைத்து வைத்து மாலையில் விடுவிப்பதுதான் வழக்கம். ஆனால், குஷ்பு மட்டும் ஏன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2012ம் ஆண்டில் திமுகவினர் நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் குஷ்புவும் பங்கேற்று, திருவல்லிக்கேணியில் உள்ள மண்டபத்தில்தான் தங்க வைக்கப்பட்டிருந்தார். (சரவண பவன் ஓட்டலில் இருந்து சாப்பாடு வந்தது என்பது தனிக்கதை. ) இப்போது மட்டும் ஏன் சொகுதி விடுதி? என்ற கேள்வி நெட்டிசன்களிடையே எழுந்திருக்கிறது.

திருமாளவனின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான குஷ்புவின் கைதிலும் சர்ச்சை எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இனியாவது பெற்றாக வேண்டும் என்று பாமக இன்று முதல்...

தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி்யின் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளுக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கவிருக்கிறது.

“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடிதம்

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!