திண்டுக்கல்: சாலைமறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார்

திண்டுக்கல்: சாலைமறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார்

ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள காமராஜர் அணைக்கு வரும் குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரால் ஆத்தூர், அனுமந்தராயன்கோட்டை, பாலராஜக்காபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல்: சாலைமறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார்

தடுப்புச்சுவரை அகற்றக் கோரி பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தேனி – திண்டுக்கல் புறவழிச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்: சாலைமறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா மற்றும் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்காமல் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200 பேரை கைதுசெய்தனர்.

திண்டுக்கல்: சாலைமறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார்