திருமாவளவனின் தரம் தாழ்ந்த அரசியல்! வலுக்கும் கண்டனங்கள்!

 

திருமாவளவனின் தரம் தாழ்ந்த அரசியல்! வலுக்கும் கண்டனங்கள்!

இந்துப்பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பூதாகரமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகள், ஆண்களுக்கு அவர்கள் கீழானவர்கள் என அவர் பேசியிருந்ததால் பாஜக மகளிர் அணியினர் மாநிலம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமாவளவனின் தரம் தாழ்ந்த அரசியல்! வலுக்கும் கண்டனங்கள்!

இந்துபெண்களை இழிவாக பேசி,மத நல்லிணக்கத்தை சீர் குலைக்க முயற்சி செய்யும் திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது. இதனால் தமிழகம் எங்கும் திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெண்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஒரு விவகாரம் மட்டுமல்லாது, தொடர்ச்சியாக இந்துமதத்தை இழிவு செய்து பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் திருமாவளவன் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தன் மீது ஏற்பட்ட இந்த கறையை மறைப்பதற்காகவும், மக்களை ஏமாற்றும் வகையிலும், ”நான் முதல்வரானால் கண்டிப்பாக மதுக்கடைகளை மூடுவேன்” என பேசியுள்ளார் திருமாவளவன் என்றே வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்து மத பெண்களை இழிவுபடுத்தி பேசியதை மறைக்கும் விதமாக, திடீரென்று மதுக்கடைகளை மூடுவேன் என திருமாவளவன் கூறியுள்ளது அவருடைய தரம் தாழ்ந்த அரசியலையும், அரசியல் ஆதாயத்திற்காக அவர் எந்த அளவுக்கும் கீழ்த்தரமாக நடந்து கொள்வார் என்பதையே உணர்த்துகிறது என்ற பேச்சும் வலைத்தளங்களில் எழுந்திருக்கிறது.

இந்த செயல் மூலம், இந்து மத பெண்களின் எதிர்ப்பை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி அவர்களின் வெறுப்புக்கு பாத்திரமாக மாறியுள்ளார் திருமாவளவன் என்றே கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கிறது.