பள்ளிகள் மூடப்பட்டதால் பப்ஜி கேமுக்கு அடிமையான மாணவர்கள் -நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் ..

பள்ளிகள் மூடப்பட்டதால் பப்ஜி கேமுக்கு அடிமையான மாணவர்கள் -நாளுக்கு  நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் ..

இப்போது கொரானா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் செல்போனிலிருக்கும் பப்ஜி என்ற கேமுக்கு அடிமையாகிவிட்டார்கள் ,பெரியவர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டார்கள் .இதனால் பலர் உயிரிழந்து வருவது வேதனையளிக்கிறது.

பள்ளிகள் மூடப்பட்டதால் பப்ஜி கேமுக்கு அடிமையான மாணவர்கள் -நாளுக்கு  நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் ..
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஜூஜ்ஜுலகுண்டா கிராமத்தில் ஒரு 16 வயது சிறுவன் எந்நேரமும் பப்ஜி கேம் விளையாடி வந்தான் .ஆரம்பத்தில் எப்போதாவது விளையாடிய அந்த சிறுவன் ,இந்த கொரானா பரவலை தடுக்க பள்ளிகள் மூடப்பட்டதால் எந்த நேரமும் அந்த கேம் விளையாடி அதற்கு அடிமையாகி விட்டான் .அவனால் அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை
அவன் சரியான சாப்பாடு இல்லாமல் ,தூக்கம் இல்லாமல் ,தண்ணீர் கூட குடிக்காமல் அந்த கேம் விளையாடியதில் அவன் உடலில் நீரிழப்பு ஏற்பட்டதால் அவனுடைய பெற்றோர்கள் அவனை அருகிலுள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தார்கள் .அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் அவன் உயிரிழந்தான் .
இதே போல மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாரூக்கான் , தொடரந்து தூக்கமில்லாமல் செல்போனில் இந்த பப்ஜி கேம் விளையாடியதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தான்.
தொடரும் உயிரிழப்புகளால் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளார்கள் .

பள்ளிகள் மூடப்பட்டதால் பப்ஜி கேமுக்கு அடிமையான மாணவர்கள் -நாளுக்கு  நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள் ..