Home தமிழகம் சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 16 பேர் மரணம்!

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 16 பேர் மரணம்!

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த கொடிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. லட்சக் கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலமும், தமிழகமும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டுமே 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 பேரும் கேஎம்சி மருத்துவமனையில் 2 பேரும் தனியார் மருத்துவமனையில் 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...
Do NOT follow this link or you will be banned from the site!