ஒரு நாளைக்கு 40 – 50 முறை வலிப்பு வந்து அவதியுற்ற குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!

 

ஒரு நாளைக்கு 40 – 50 முறை வலிப்பு வந்து அவதியுற்ற குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!

ஒரு நாளைக்கு  40- 50 முறை கட்டுப்படுத்த முடியாத வகையில் வலிப்பு ஏற்பட்டு அவதியுற்று வந்த 16 மாத கைக் குழந்தைக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிறந்து 16 மாதமே ஆன குழந்தை ஜெய் பிரஜித்க்கு பிறந்ததிலிருந்து வலிப்பு நோய் பாதிப்பு இருந்துள்ளது. அடுத்து வந்த மாதங்களில் வலிப்பு நோய்ப் பாதிப்பு மோசமான நிலைக்குச் சென்றது. பிரசவத்தின் போது சிக்கலான சூழல் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து குழந்தைக்கு தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. குழந்தையை பச்சிளம் குழந்தைகளுக்கான ஐசியு பிரிவில் 28 நாட்கள் வைத்துள்ளனர். இந்த கால கட்டத்தில் குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் ஒரு நாளைக்கு 40-  50 வலிப்புகள் ஏற்படும் அளவுக்கு ஏற்படவே பல்வேறு மருந்துகள் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 40 – 50 முறை வலிப்பு வந்து அவதியுற்ற குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!

இந்த நிலையில் குழந்தையை சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூளை நரம்பியல் மருத்துவர் ஶ்ரீதர் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர்.  குழந்தையின் மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் பிரசவ கால மூச்சுத் திணறல் பாதிப்பு குழந்தையின் மூளையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதைக் கண்டறிந்தனர். இஇஜி பரிசோதனையில் பல்வேறு தனித்தனி இடங்களில் ஏற்பட்ட வலிப்பு தாக்கங்கள் மூளை முழுக்க பரவி பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மூளையில் அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் மட்டுமே இந்த பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து குழந்தைக்கு முன்புற கார்பஸ் காலோஸ்டமி என்ற மூளையின் இரு பகுதிகளுக்கு இடையில் சென்று நேரடியாக அதை பிரித்து நரம்பு இழைகள் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதன் மூலம் குழந்தைக்கு வலிப்பு ஏற்படுவது நின்றது.

இது குறித்து டாக்டர் ஶ்ரீதர் கூறுகையில், “தற்போது குழந்தை ஜெய் பிரஜித்துக்கு வலிப்பு ஏற்படுவது முற்றிலுமாக நின்றுவிட்டது. வலிப்பு பாதிப்பைத் தடுக்க எடுத்துக்கொண்ட மாத்திரை மருந்துகளின் அளவும் மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது. குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் உதவி புரிந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வலிப்பு நோயிலிருந்து மட்டும் அவர்கள் விடுதலை பெறவில்லை, தரமான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.