திருமண நிகழ்ச்சியில் 16 பேர் உயிரிழப்பு – மாப்பிள்ளை உயிர் தப்பினார்

திருமண நிகழ்ச்சியில் 16 பேர் உயிரிழப்பு – மாப்பிள்ளை உயிர் தப்பினார்

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாப்பிள்ளை காயத்துடன் உயிர் தப்பினார். மணமகள் அந்த இடத்தில் இல்லாததால் அவரும் உயிர் தப்பினார். வங்கதேசம் மேற்கு மாவட்டத்தின் சபைனாவாப்கஞ்சில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது .

திருமண நிகழ்ச்சியில் 16 பேர் உயிரிழப்பு – மாப்பிள்ளை உயிர் தப்பினார்

பருவ மழை பெய்து வங்கதேசத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென் கிழக்கு மாவட்டம் காக்ஸ் பஜாரில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்நிலையில் மேற்கு மாவட்டம் சபைனாவாப்கஞ்சில் ஒரு திருமணம் நடந்து இருக்கிறது. அந்த திருமண வீடு ஆற்றங்கரை ஓரமாக இருந்திருக்கிறது. பலத்த மழை பெய்த போது திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் சிலர் ஒரு இடத்தில் ஒதுங்கி இருந்திருக்கின்றனர். மழைக்கு ஒதுங்கி நின்ற அவர்கள் மீது மின்னல் தாக்கி இருக்கிறது. இதில் 16 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருமண நிகழ்ச்சியில் 16 பேர் உயிரிழப்பு – மாப்பிள்ளை உயிர் தப்பினார்

மாப்பிள்ளை மட்டும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மணப்பெண் அந்த இடத்தில் இல்லாததால் அவரும் உயிர் தப்பியிருக்கிறார்.