ஜெகன் மோகன் – சந்திரபாபு நாயுடு கட்சியினர் இடையே மோதல் : 16 பேர் படுகாயம் : போலீஸ் குவிப்பு!

ஜெகன் மோகன் – சந்திரபாபு நாயுடு கட்சியினர் இடையே மோதல் : 16 பேர் படுகாயம் : போலீஸ் குவிப்பு!

ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சியான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் , எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஜெகன் மோகன் – சந்திரபாபு நாயுடு கட்சியினர் இடையே மோதல் : 16 பேர் படுகாயம் : போலீஸ் குவிப்பு!

இந்த சூழலில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மெட்டவலசா கிராம பஞ்சாயத்து தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் வெற்றிபெற்றார். இதனால் தெலுங்கு தேசம் கட்சியினர் அவரது வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இதுவொருபுறமிருக்க, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினரோ தெலுங்கு தேச கட்சி வேட்பாளரின் வெற்றியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.

ஜெகன் மோகன் – சந்திரபாபு நாயுடு கட்சியினர் இடையே மோதல் : 16 பேர் படுகாயம் : போலீஸ் குவிப்பு!

இதுகுறித்து ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் , எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதமானது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் அங்கிருந்து அகற்றினர். ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி- தெலுங்கு தேச கட்சிக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் அப்பகுதியில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.