அதிகரித்து வரும் கொரோன வைரஸ் பாதிப்பு.. நாளை முதல் 16 நாட்களுக்கு பீகாரில் லாக்டவுன்…

அதிகரித்து வரும் கொரோன வைரஸ் பாதிப்பு.. நாளை முதல் 16 நாட்களுக்கு பீகாரில் லாக்டவுன்…

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பீகாரில் அண்மையில் காலமாக கொரோனா வைரஸ் மேலும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, பீகாரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி விட்டது. அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் கொரோன வைரஸ் பாதிப்பு.. நாளை முதல் 16 நாட்களுக்கு பீகாரில் லாக்டவுன்…

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் ஆயுதத்தை பீகார் அரசு கையில் எடுத்துள்ளது. பீகாரில் நாளை (ஜூலை 16) முதல் இம்மாதம் 31ம் தேதி வரை 16 நாட்கள் லாக்டவுன் நடைமுறைப்படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் சுஷில குமார் மோடி நேற்று அறிவித்தார். அனைத்து நகராட்சி, மாவட்ட, துணை பிரிவு மற்றும் ஒன்றிய தலைமைய மட்டங்களில் 16 நாட்கள் லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் என சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

அதிகரித்து வரும் கொரோன வைரஸ் பாதிப்பு.. நாளை முதல் 16 நாட்களுக்கு பீகாரில் லாக்டவுன்…

16 நாள் லாக்டவுன் காலத்தில், வர்த்தக, தனியார் நிறுவனங்கள் திறக்கப்படாது,. அனைத்து கல்வி, பயிற்சி, ரிசர்ச் மற்றும் கோச்சிங் நிறுவனங்கள் செயல்பட அனுமதி கிடையாது. மத வழிப்பாட்டு தலங்கள் திறக்க மற்றும் மத கூட்டங்களுக்கு நடத்த அனுமதி கிடையாது. அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு,கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகள் , கூட்டங்கள் மற்றும் பூங்காகளுக்கு அனுமதி கிடையாது. அதேசமயம் மருத்துவமனை மற்றும் மருந்து கடைகள் திறந்திருக்கும். அத்தியாவசிய பொருட்கள் கடை, வங்கி, இன்ஸ்சூரன்ஸ் அலுவலகங்கள் திறந்திருக்கும் உள்பட சிலவற்றை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.