வடசென்னையில் 16 செ.மீ மழை பதிவு – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

வடசென்னையில் 16 செ.மீ மழை பதிவு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கும் நிவர் புயல் நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை 145 கி.மீ வேகத்தில் காற்று வீசி கரையைக் கடக்க உள்ளது. காற்றின் வேகம் அதிகரிப்பதால் மக்கள் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

வடசென்னையில் 16 செ.மீ மழை பதிவு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்கு புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கும் பணியும், பேரிடர் மீட்புக் குழுவை தயார் படுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

வடசென்னையில் 16 செ.மீ மழை பதிவு – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் வடசென்னையில் அதிகபட்சமாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைகழகம், விமான நிலையம், சோழிங்கநல்லூர் பகுதியில் 15 சென்டி மீட்டரும் மாமல்லபுரம், ஆலந்தூர், புழல், செம்பரம்பாக்கம் பகுதியில் 12 சென்டி மீட்டரும் தாம்பரம், அம்பத்தூரில் தலா 11 சென்டி மீட்டரும் பெரம்பூர், செங்குன்றம், கொளப்பாக்கம்,பூந்தமல்லியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.