நீட் தேர்வில் ‘முட்டை’ மார்க் வாங்கிய மாணவி – மேலும் சொன்ன ‘பொய்’க்கு ரூ 25 ஆயிரம் அபராதம்

 

நீட் தேர்வில் ‘முட்டை’ மார்க் வாங்கிய மாணவி – மேலும் சொன்ன ‘பொய்’க்கு ரூ 25 ஆயிரம் அபராதம்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே அமராவதி நகரை சேர்ந்தவர் மாணவி வசுந்தரா போஜன். சமீபத்தில் இந்தியா முழுவதும் நடந்த ‘நீட்’ தேர்வில் இவரும் கலந்து கொண்டு பரீட்சை எழுதினார். இந்தத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது இவருக்கு ‘முட்டை’மதிப்பெண் கிடைத்திருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது பற்றி கேட்ட போது “நான் மிக நன்றாக பரீட்சை எழுதியிருந்தேன். எனக்கு தப்பான மதிப்பெண் கொடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். இதனையடுத்து வசுந்தரா போஜனின் பெற்றோர், வழக்கறிஞர் அஸ்வின் தேஷ்பாண்டே என்பவர் மூலம் மும்பை உயர் நீதி மன்ற நாக்பூர் கிளையில் வசுந்தரா போஜன் பெயரில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ” நான் 10-ம் வகுப்பு தேர்வில் 93.4 சத மதிப்பெண்களும் 12-ம் வகுப்பு தேர்வில் 81.85 சத மதிப்பெண்களும் பெற்றுள்ளேன். நீட் தேர்வில் எனக்கு 720-க்கு 600 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு தப்பாக முட்டை மதிப்பெண் போட்டுள்ளனர். ஆகவே எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்” என்று கேட்டிருந்தார்.

நீட் தேர்வில் ‘முட்டை’ மார்க் வாங்கிய மாணவி – மேலும் சொன்ன ‘பொய்’க்கு ரூ 25 ஆயிரம் அபராதம்


நீதிபதிகள் அதுல் சந்துர்கர், நிதின் சூரியவன்ஷி ஆகியோர் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இதுதொடர்பாக கல்வித் துறை தேசிய தேர்வு முகமை ஆகியோர் அக்டோபர் 26-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தேசிய தேர்வு மகமையனது மாணவி வசுந்தராவின் தேர்வு விடைத்தாளை உயர் நீதி மன்றத்தில் சமர்பித்தது அந்த விடைத்தாளில் மாணவி வசுந்தரா எந்த ஒரு கேள்விக்கும் விடையளிக்கவில்லை. காகிதம் முழுவதும் வெற்றுத்தாளாக இருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைனைக்கு வந்த போது மாணவி வசுந்தரா “தான் மிகப் பிரமாதமாக தேர்வு எழுதியதாக” வலியுறுத்திச் சொன்னார். இதனையடுத்து அவரது வழக்கறிஞர் தனிப்பட்ட முறையில் அழைத்து விசாரித்த பின்பு “ ஆமாம், நான் ஒரு கேள்விக்கும் விடைளிக்கவில்லை. அப்பா, அம்மாவுக்கு பயந்து அப்படிச் சொன்னேன்” எனக் கூறியுள்ளார். இதனைடுத்து அவரது சார்பில் வழக்கறிஞர் அஸ்வின் பாண்டே நீதி மன்றத்தில் மன்னிப்புக் கேட்டார். ஆனால் வசுந்தராவிற்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

சுபாஷ் சந்திரபோஸ்