16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பதுடன் உடலுறவு கொண்டால் குற்றமல்ல; உயர் நீதிமன்றம் அறிவுரை!

 

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பதுடன் உடலுறவு கொண்டால் குற்றமல்ல; உயர் நீதிமன்றம் அறிவுரை!

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும்

சென்னை: போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

rape

எனினும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வந்ததால், இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு, 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழிவகை செய்தது.

இந்நிலையில், நாமக்கலை சேர்ந்த சபரிநாதன் என்பவர் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

rape

அதாவது, 16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பதுடன் பாலுறவு கொண்டால் குற்றமாக கருதாத வகையில் திருத்தம் தேவை எனவும், 18 வயது வரை சிறுமிகள் என்று வரையறுத்துள்ளதை 16 வயதாக குறைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும், பாலுணர்வு தொடர்பான படங்களை எடுக்கும் போது, மது, புகை பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு அளிப்பதை போல போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் வாசிங்க

பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்: ஆயுள் தண்டனைக்கு வழிவகுத்த வழக்குப்பதிவு!