16 ஆண்டுகளுக்குப் பிறகு அமிர்தசரஸ் குடும்பம் தற்கொலை வழக்கில் சிக்கிய முன்னாள் டி.ஐ.ஜி மற்றும் டி.எஸ்.பி.

 

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமிர்தசரஸ் குடும்பம் தற்கொலை வழக்கில் சிக்கிய முன்னாள் டி.ஐ.ஜி மற்றும் டி.எஸ்.பி.

ஹர்தீப் சிங், அவரது மனைவி, தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் 2004 அக்டோபர் 31 அன்று குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன்னர், அந்த குடும்பத்தினர் தங்கள் வீட்டின் ஒரு அறையின் சுவரில் ஒரு குறிப்பை எழுதியிருந்தனர். அதோடு தங்களின் தற்கொலைக் குறிப்பை  நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பியிருந்தனர்.

தற்கொலைக் குறிப்பில், ஹர்தீப் தனது தந்தை சுந்தர் சிங்கைக் கொலை செய்ததாகக் கூறியிருந்தார், மேலும் உடலை புதைக்கும் போது போது அவரது உறவினர் சப்ரீன் அதைப் பார்த்துவிட்டதாகக் கூறினார், இதை அவரது மாமியார் மொஹிந்தர் சிங்குக்கு தெரிவித்தார். இந்த கொலையைக் காரணம் காட்டி மொஹிந்தர் என்னிடம் பணம் பறிக்கத் தொடங்கினார் என்றும் பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இறந்தவரின் சகோதரி மற்றும் மைத்துனருக்கு எதிராக பிளாக் மெயில் செய்த குற்றச்சாட்டுகளும் இருந்தன.

amritsar

இந்த தற்கொலை சம்பவம் நடந்தபோது, குல்தார் சிங் என்பவர் அந்த பகுதிக்கு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவரே எங்களை இந்த கோர முடிவெடுக்கத் தூண்டினார் என்று அந்த குடும்பம் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த குற்றத்திற்கு தண்டனை பெற்றவர்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹர்தேவ் சிங் என்பவரும் அடங்குவார். என்ன தண்டனை என்று வரும் பிப்ரவரி 19 அன்று அறிவிக்கப்படும்.

மூன்று முறை விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவில்லை”. 2009 ஆம் ஆண்டில், பஞ்சாப் மனித உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளர் சரப்ஜித் வெர்கா இந்த விஷயத்தை முதலில் உள்ளூர் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.