அனைத்து மாவட்டங்களிலும் கோசாலைகள் -ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

 

அனைத்து மாவட்டங்களிலும் கோசாலைகள் -ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

130 ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சட்டம் மற்றும் காவல்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் கோசாலைகள் -ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

பெங்களூருவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், 139 ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்வது குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பசவராஜ் பொம்மை, ‘’130 ஆயுள் சிறைகைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னர் அதுகுறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் கோசாலைகள் -ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

மேலும், கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோசாலைகள் அமைக்கவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிக்வித்துள்ளார்.

ஒரு மாவட்டத்திற்கு தலா ஒரு கோசாலை திறக்கப்ப இருக்கிறது என்றும், இதற்காக முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு தேவைப்படும் நிதியையும் ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.