அடித்து தூள் கிளப்பினார்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 15 நாட்கள்

 

அடித்து தூள் கிளப்பினார்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 15 நாட்கள்

முதல்வர் ஸ்டாலின் முதல் 15 நாட்கள் ஆட்சி குறித்து பரபரப்பு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,’’ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் ஆரம்பித்தது ராஜபாட்டை. ஆடம்பரமில்லாமல் சிம்பிளாக அமைச்சரவை பதவியேற்றபோது பிறந்தது புதிய ஆட்சி மீதான நம்பிக்கை. ஆட்சிப்பயணம் மே7க்கு முன்பே தொடங்கிவிட்டது.

அடித்து தூள் கிளப்பினார்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 15 நாட்கள்

செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை. ஊடகவியலாளர்கள் இனி முன்கள பணியாளர்கள் என அறிவித்தார். கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை மூன்று ரூபாய் குறைப்பு, நகர பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம். பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு தீர்வு காண புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு காப்பீட்டு சிகிச்சை திட்டத்தின் கீழ் சிகிச்சை என ஐந்து திட்டகளுக்கான கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.’’என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த வீடியோவில், ’’நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு தலைமை செயலகத்தில் கலெக்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஸ்டாலின், புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

அடித்து தூள் கிளப்பினார்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 15 நாட்கள்

மகளிருக்கான இலவச பயண கோப்புகளில் கையெழுத்திட்டது மதியம். மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை என்ற வாசகம் இரவுக்குள் அனைத்து பேருந்துகளிலும் ஒட்டப்பட்டது. எங்களுக்கு கிடையாதா என திருநங்கையர் வைத்த கோரிக்கையை உடனடியாக செயல்படுத்தவும் செய்தார்.

ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு முதல் நாள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அடுத்த நாளில் தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உயர்த்தியது மத்திய அரசு.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் படி 100 நாட்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறைஅதிகாரியாக ஷில்பா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு, பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடித்து தூள் கிளப்பினார்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 15 நாட்கள்

கொரோனா நடவடிக்கைகள் அதற்காக அமைச்சர்கள் செய்யவேண்டியது குறித்து பேசியது முதல் அமைச்சரவை கூட்டம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்தார்.

இத்தனை பணிகளுக்கும் இடையே மதுரையை சேர்ந்த சிறுவனிடம் பேசவும் அக்கறை இருந்தது. சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்ததால் அந்த சிறுவனை போனில் பேசியதோடு அல்லாமல் அச்சிறுவனுக்கு சைக்கிளும் வாங்கிக்கொடுத்தார்.

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை 2 ஆயிரம் ரூபாயை கோட்டையில் மிக எளிமையாக தொடங்கிவைத்தார். சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் மருந்தை அனைத்து பெரு நகரங்களிலும் கிடைக்க வசதி செய்தார்.

அடித்து தூள் கிளப்பினார்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 15 நாட்கள்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு எல்லோரும் நிதி அளிக்க வேண்டும் என்று அறிவித்த முதல்வர், பேரிடர் காலத்தில் அளிக்கப்படும் நிதி கொரோனா நிவாரணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

புதிய கல்விக்கொள்கைக்கு இடமில்லை என்று ஆரம்பத்திலேயே அறிவித்தது தமிழக அரசு. ஊரடங்கு முடியும் வரை 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அளித்தார். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்க உலகளாவிய டெண்டர் கோரியிருப்பதாக சொல்லி அடித்து தூள் கிளப்பினார்.

அடித்து தூள் கிளப்பினார்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 15 நாட்கள்

அற்புதம்மாள் அளித்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு அளித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 17 பேரின் வாரிசுகளுக்கு அவரவரின் கல்வி தகுதியை பொறுத்து அரசு பணிக்கான ஆணையை வழங்கியதோடு, தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னபடி தூத்துக்குடி போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் மீதுபோடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றார்.

தன்னுடையை பேஸ்புக், டுவிட்டர் முகப்பு பக்கத்தில் இனி தமிழகம் வெல்லும் என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மைதான் இனி தமிழகம் வெல்லும்’’ என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.