Home உலகம் இதயம் நலம்: இணையங்களில் வைரலாகும் அர்னால்டின் தம்ஸ் -அப்

இதயம் நலம்: இணையங்களில் வைரலாகும் அர்னால்டின் தம்ஸ் -அப்

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர்(வயது73). இவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு இதய அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.

இதயத்தில் இருக்கும் பெருநாடி வால்வை மாற்றுவதற்காக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்போது அர்னால்டு நலமுடன் இருக்கிறார்.

இதுகுறித்து அவரே, ‘’எனது கடைசி அறுவை சிகிச்சையிலிருந்து எனது புதிய நுரையீரல் வால்வுடன் செல்ல ஒரு புதிய பெருநாடி வால்வு பொருத்தப்பட்டு உள்ளது. அதை நான் அருமையாக உணர்கிறேன்.

கிளீவ்லேண்ட் கிளினிக்கில் உள்ள குழுவினருக்கு நன்றி. செவிலியருக்கும் நன்றி!’’என்று தெரிவித்துள்ளதோடு, தான் நலமுடன் இருக்கிறேன் என்பதையும், தனது இதயம் நல்லமுறையில் இயங்குகிறதுஎன்பதையும் குறிக்கும் விதமாக, இதய வடிவிலான கை மெத்தை ஒன்றின் மேல் கையை வைத்து, கையை உயர்த்திக்காட்டி, தம்ஸ் அப் செய்யும் போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் அர்னால்டு.

அர்னால்டின் இதயம் நலம் சம்பந்தமான இந்த போட்டோ ரசிகர்களால் இணையங்களில் வைரலாகி வருகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கரையை கடக்க தொடங்கியது புயல்! வேலூர், திருவண்ணாமலைக்கு மழை எச்சரிக்கை!

நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கி உள்ளது. இதையொட்டி உச்ச கட்ட கண்காணிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது...

புயல் பாதித்த பகுதிகளில் வேலை நிறுத்தம் இல்லை! தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளை அறிவித்திருந்த பொது வேலை நிறுத்தம், புயல் பாதித்த பகுதிகளில் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து வீரர் மாரடோனா காலமானார்!

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா மருத்துவமனையில் காலமானார். 60 வயதாகும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த அவர்...
Do NOT follow this link or you will be banned from the site!