Home அரசியல் கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன்... ஸ்டாலினை கடுமையாக சாடிய அமைச்சர் செல்லூர் ராஜு

கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன்… ஸ்டாலினை கடுமையாக சாடிய அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றிய கீழமாத்தூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைத்தார்.

செல்லூர் ராஜு

அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அதிமுக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, ’’திமுக -காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதுதான் நீட் தேர்வினை கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போது நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் செய்து நடிக்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகுதான் மாணவர்கள் சேர்க்கை நடத்துவோம் என்று அதிமுக தீர்மானமாக உள்ளது. ஆனால், இந்நேரம் திமுக ஆட்சியில் இருந்தால் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள்’’என்றார்.

மேலும், ‘’அதிமுக அரசு செய்வதைத்தான் சொல்வோம். சொல்வதைத்தான் செய்வோம். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாராளுமன்ற தேர்தலில் நகை கடனை தள்ளுபடி செய்கிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை சொன்னார். இப்போது பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றி வருகின்றார். ஸ்டாலின் ஆட்சிக்கும் வரமாட்டார்; பொதுமக்களுக்கு எதுவும் செய்யவும் மாட்டார்.

கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி கைகுண்டம் காட்டுறேன்னு சொன்னதுமாதிரி மக்களை ஏமாற்றுவார். பொதுமக்கள் யாரும் அவரை நம்பாதீர்கள். நம்பவும் மாட்டார்கள்’’என்றார் அழுத்தமாக.

மாவட்ட செய்திகள்

Most Popular

கரையை கடக்க தொடங்கியது புயல்! வேலூர், திருவண்ணாமலைக்கு மழை எச்சரிக்கை!

நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கி உள்ளது. இதையொட்டி உச்ச கட்ட கண்காணிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது...

புயல் பாதித்த பகுதிகளில் வேலை நிறுத்தம் இல்லை! தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளை அறிவித்திருந்த பொது வேலை நிறுத்தம், புயல் பாதித்த பகுதிகளில் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து வீரர் மாரடோனா காலமானார்!

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா மருத்துவமனையில் காலமானார். 60 வயதாகும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த அவர்...
Do NOT follow this link or you will be banned from the site!