காரைக்கால்: பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சுவாமி தரிசனம்

காரைக்கால்: பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மேலகாசாகுடியில் உள்ள பழமையான பத்ரகாளி அம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. கோவிலின் புனரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

காரைக்கால்: பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சுவாமி தரிசனம்

அதனை தொடர்ந்து, கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர், மங்கள வாத்தியங்களுடன் புனிதநீர் அடங்கிய கடங்கள் ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டன.

காரைக்கால்: பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சுவாமி தரிசனம்

தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, பத்ரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால்: பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சுவாமி தரிசனம்