Home அரசியல் அநீதி இழைக்கும் மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரம்! அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தலையிடக்கோரும் டி.ஆர்.பாலு

அநீதி இழைக்கும் மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரம்! அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தலையிடக்கோரும் டி.ஆர்.பாலு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில்13 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க அளிக்கப்பட்ட விளம்பரத்தில், இந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால், திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவரும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தனுக்கு அவசர கடிதம் எழுதி இருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.

அக்கடிதத்தில், பல்வேறு நிலைகளில்13 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க அளிக்கப்பட்டுள்ள, சுகாதார மற்றும் மக்கள் நல நிறுவனத்தின் விளம்பரத்தில், விளம்பரப்படுத்தப்பட்ட தேதி, நீட்டிக்கப்பட்ட தேதி, விண்ணப் பிக்க கடைசி நாள் ஆகியன குறித்த தெளிவான விவரங்கள் கொடுக்கப் படாமலும், 200மதிப் பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் இந்தி மொழியில் கட்டாயமாக எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தி மொழிதெரியாத மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

60 சதவிகிதத்திற்கும் மேலுள்ள இந்தி தெரியாத, இந்திய மாணவர்களுக்கு, சமவாய்ப்புகள் வழங்கப் படாதநிலையில், சுகாதார மற்றும் மக்கள் நல நிறுவனத்தின் விளம்பரம், அனைத்திந்திய அளவில், மத்திய சுகாதார குடும்ப நலத்துறை வேலைவாய்ப்புகளில், பெரும்தீமையை விளைவிப்பதாக உள்ளது.

இந்திய அரசியல் சட்டத்திற்கும், நீதித் துறையின்வழிகாட்டு தலுக்கும் எதிராக,13 ஆயிரம் பணியாளர்களைத்தேர்ந்தெடுக்க, சுகாதாரம்மற்றும் குடும்ப நலத் துறையின் அனைத்திந்திய அளவிலான இந்திய அரசின்தேர்வு, இந்தி தெரியாத,இந்திய மாணவர்களுக்குவேலை வாய்ப்பை நிராகரிக்கும் வகையில், மிகப்பெரும் பாரபட்சமாக அமைந்துவிடும்.எனவே, இந்தப் பிரச்சினையில் மாண்புமிகு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலஅமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் தலையிட்டு, சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும், இந்த தேர்வினை உடனடியாக ஒத்தி வைக்கவும் ஆவனசெய்ய வேண்டுமென கடிதத்தின் வலியுறுத்தி இருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பைனான்சியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர்...

நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு...

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி தருமபுரியில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை...

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூர் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், திமுக எம்எல்ஏ நல்லதம்பி மனு வழங்கினார். அந்த...
Do NOT follow this link or you will be banned from the site!