திருச்சி: விஜயதசமியை ஒட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்கம்

திருச்சி: விஜயதசமியை ஒட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்கம்

விஜயதசமி தினத்தையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்கிவைத்து, மாணவர் சேர்க்கை நடைபெற்றது.விஜயதசமி தினத்தன்று புதிதாக தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்களது பணிகளை தொடங்குவது நன்று என்பது ஐதீகம். இந்நாளில்

திருச்சி: விஜயதசமியை ஒட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்கம்

கல்வி, கலைகள் என எதை தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பதால்,

விஜயதசமியான இன்று திருச்சி பிராட்டியூரில் உள்ள அரசு நடுநிலை பள்ளி மற்றும் எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்வு தொடங்கப்பட்டது.

திருச்சி: விஜயதசமியை ஒட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்கம்

இதனையொட்டி, ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கைப்பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல் மற்றும் பச்சரிசியில் மஞ்சளினால் வித்யாரம்பம்

எனப்படும் ஓம் என எழுதி, பின்னர் ‘அ, ஆ’ எழுத கற்றுக்கொடுத்தனர். அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

திருச்சி: விஜயதசமியை ஒட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்கம்

முன்னதாக பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து சரஸ்வதி தேவிக்கு படையலிட்டு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

திருச்சி: விஜயதசமியை ஒட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்கம்