Home க்ரைம் விடிய விடிய ஆட்டம் போடும் மாணவிகள்! உணவகங்கள் முகமூடியில் இயங்கும் ஹூக்கா பார்கள்!

விடிய விடிய ஆட்டம் போடும் மாணவிகள்! உணவகங்கள் முகமூடியில் இயங்கும் ஹூக்கா பார்கள்!

கஃபே. ரெஸ்ட்டாரெண்ட் என்று உணவகங்கள் முகமூடியில் சென்னையில் நிறைய ஹூக்கா பார்கள் இயங்கி வருகின்றன. இந்த பார்களுக்கு இளசுகள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் சென்று வருவதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

குடுவைக்குள் கஞ்சா உ ள்ளிட்ட போதை பொருட்களை வைத்து புகையூட்டப்படுகிறது. அந்த குடுவையில் இருந்து நீண்ட குழாயிகள் மூலமாக வரும் புகையினை உள் இழுத்து, அந்த போதையில் ஆட்டம் போடுகிறார்கள். போதை குறைந்தவுடன் மீண்டும் வந்து உள் இழுத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். இப்படியே விடிய விடிய ஆடிவிட்டு அரைகுறையான போதையில் அதிகாலையில் வீட்டுக்குச்செல்கிறார்கள்.

பணியில் இருக்கும் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் போலவே பள்ளி மாணவ, மாணவிகளும் இந்த ஜோதியில் ஐக்கியமாகிறார்கள். ஒருவருக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படிகிறது என்பதால் பெரும்பாலும் பணக்கார நபர்களே இந்த போதையாட்டத்திற்கு வருகிறார்கள்.
இவ்வகையான பார்களுக்கு இருக்கும் மவுசை பார்த்து, சென்னையில் இத்தகைய ஹூக்கா பார்கள் அதிகரிக்கின்றன.


ஹூக்கா பார்களால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாய்போகிறது என்று பலரும் புகார் தெரிவித்து வந்தநிலையில், போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட 8 இடங்களில் நுங்கம்பாக்கம் சரக உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் 8 பார்களில் இருந்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பார்களும் மூடப்பட்டுள்ளன. ஹூக்கா குடுவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உணவகங்கள் என்ற முகமூடி போல் இன்னும் என்னென்ன முகமூடியில் ஹூக்கா பார்கள் இயங்கி வருகின்றன என்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...

7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது

சென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...

டெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்

விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...
Do NOT follow this link or you will be banned from the site!