கோவை: பல்வேறு விதமான பிரியாணிகளுக்கென பிரத்யேக உணவகம் திறப்பு

கோவை: பல்வேறு விதமான பிரியாணிகளுக்கென பிரத்யேக உணவகம் திறப்பு

கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரியாணி கடையில், உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு துளசி செடி இலவசமாக வழங்கப்படும் என்று உரிமையாளர் அறிவித்துள்ளார். கோவை பீளமேடு பி.கே.டி நகர் பகுதியில் பிரியாணிக்கென பிரத்யேக உணவகம் இன்று துவங்கப்பட்டது.

கோவை: பல்வேறு விதமான பிரியாணிகளுக்கென பிரத்யேக உணவகம் திறப்பு

இங்கு, இந்தியாவின் பிரபலமான கர்நாடகா ஹோஸ்காத்தே பிரியாணி, உ.பி.யின் லக்னோவி பிரியாணி, ஹைதரபாத் பிரியாணி மற்றும் தொண்ணை பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையிலான பிரியாணிகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனையொட்டி நடைபெற்ற விழாவில், நிர்வாக இயக்குனர் பிர்தோஸ் ஃபர்ஹான் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி கடையை திறந்துவைத்தார்.

கோவை: பல்வேறு விதமான பிரியாணிகளுக்கென பிரத்யேக உணவகம் திறப்பு

இதுகுறித்து பேசிய கடை மேலாளர் சக்திவேல், இந்தியாவில் பிரபலமான பல்வேறு வகை பிரியாணிகளை தனி சுவையுடன் இங்கு வழங்க உள்ளதாகவும், பார்சல் மற்றும் டெலிவரி முறையில் வழங்கப்பட உள்ள இந்த உணவகத்தில், ஒவ்வொரு பிரியாணி ஆர்டருக்கும் வாடிக்கையாளர்களுக்கு துளசி செடியை இலவசமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை: பல்வேறு விதமான பிரியாணிகளுக்கென பிரத்யேக உணவகம் திறப்பு