திருவள்ளூர்: குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு எதிராக அமைச்சரிடம் பொதுமக்கள் மனு

திருவள்ளூர்: குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு எதிராக அமைச்சரிடம் பொதுமக்கள் மனு

திருவள்ளூர் மாவட்டம் நூம்பல் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் அமைச்சர் பென்ஜமினை சந்தித்து மனு அளித்தனர்.

திருவள்ளூர்: குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு எதிராக அமைச்சரிடம் பொதுமக்கள் மனு

நூம்பல் பகுதியில் அரசுக்கு சொந்தமான 4.17 ஏக்கர் இடத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த வாரம் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடியிருப்புகள் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டன.

திருவள்ளூர்: குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு எதிராக அமைச்சரிடம் பொதுமக்கள் மனு

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நும்பல் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், இன்று அமைச்சர் பெஞ்சமினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டிடங்கள் கட்டவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருவள்ளூர்: குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு எதிராக அமைச்சரிடம் பொதுமக்கள் மனு

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் பென்ஜமின், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து, அங்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் செய்யப்பட்டு வந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.