Home இந்தியா வாயை கொடுத்து பெண்ணிடம் வாங்கி கட்டிக்கொண்ட காவலர்

வாயை கொடுத்து பெண்ணிடம் வாங்கி கட்டிக்கொண்ட காவலர்

மும்பை கல்பதா தேவி சாலையில் உள்ள காட்டன் எக்ஸ்சேஞ்ச் நாகா அருகே நேற்று டூவிலரில் வந்த பெண் ஹெல்மெட் அணியாததால் டிராபிக் போலீசார் ஏக்நாத் பார்த்தே, அப்பெண்ணின் டூவீலரை நிறுத்தி அபராதம் செலுத்தச்சொன்னார்.
இதில் வாக்கும்வாதம் ஏற்பட்டது. அப்போது அப்பெண்ணை ஏடாகூடமாக பேசிவிட்டார் ஏக்நாத் பார்த்தே.


இதனால் ஆவேசம் கொண்ட அந்தப்பெண், டிராபிக் போலீஸ் கான்ஷ்டபிள் சட்டையை பிடித்து இழுத்து சரிமாரியாக அடிக்கத்தொடங்கிவிட்டார். உடனே கூட்டம் கூடிவிட்டது.

தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஏக்நாத் பார்த்தே கூட்டத்தில் நுழைய முற்பட்டாலும் விடாப்பிடியாக பிடித்து இழுத்து அடித்துக்கொண்டே இருந்தார். பின்னர், ரோந்து போலீசார் வந்து டிராபிக் போலீசை மீட்டனர். அப்பெண்ணையும் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

அப்பெண்ணுடன் உடன்வந்தவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது வைரலாகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

புரெவி புயல்: ‘வெளியே செல்லாதீர்’ என ராமநாதபுரம் மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

‘வெளியே செல்லாதீர்கள்’என ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையில்...

மல்டி பிளக்ஸ் திரையரங்கு இனி இரண்டு, மூன்று சிறு திரையரங்குகளாக மாறும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களின் பதவி ஏற்பு நிகழ்வு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர், துணை தலைவர்கள், கெளரவ செயலாளர்கள்,...

அரசுப்பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் படுகாயம்

திருப்பத்தூர் திருப்பத்தர் அருகே முன்னால் சென்ற அரசுப்பேருந்து மீது, மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெல்லக்கல்நத்தம்...
Do NOT follow this link or you will be banned from the site!