உக்கிர ரூபம் கொண்ட படங்களை வீட்டில் வைக்கலாமா?

 

உக்கிர ரூபம் கொண்ட படங்களை வீட்டில் வைக்கலாமா?

உக்கிர ரூபம் கொண்ட படங்களை வீட்டில் வைத்து வணங்க உகந்தவை அல்ல. வீடுகளில், சாந்த சொரூபமாக இருக்கும் தெய்வங்களை வைத்து வணங்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. உக்கிர தெய்வங்களில் படங்கள், விக்கிரகங்களை வாங்கி வீடுகளுக்கு கொண்டு வரக்கூடாது.

உக்கிர ரூபம் கொண்ட படங்களை வீட்டில் வைக்கலாமா?

ருத்ர தாண்டவமாடும் உருவமும், கொடூர பார்வை உள்ள உருவமும், தவம் செய்வது போன்ற மற்றும் தலை விரி கோலங்களில் உள்ள சுவாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீகாளியம்மன், மகிஷாசுரமர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரபமூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது.

உக்கிர ரூபம் கொண்ட படங்களை வீட்டில் வைக்கலாமா?

சாந்த ரூபமாக இருக்கும் காளியம்மன் படத்தை வைத்து வணங்கலாம்.உக்கிர தெய்வங்கள் நமது குலதெய்வமாக இருக்கும்பட்சத்தில் அந்த சுவாமிபடங்களை மட்டும் வைக்கலாம். சனீஸ்வர பகவானின் படங்களை வீட்டிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்க கூடாது.

உக்கிர ரூபம் கொண்ட படங்களை வீட்டில் வைக்கலாமா?

கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவனம் கட்டிய முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது. தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது. இது மட்டுமில்லாமல் வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சுவாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில், வைத்து பூஜை செய்யக் கூடாது. கடலிலோ, ஆற்றிலோ, கோயில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டு விட வேண்டும்.