மதுரை: நவராத்திரி விளக்குபூஜையில், பேஸ்புக் நேரலையில் பங்கேற்ற பெண்கள்

மதுரை: நவராத்திரி விளக்குபூஜையில், பேஸ்புக் நேரலையில் பங்கேற்ற பெண்கள்

மதுரை மடத்துக்குளம் கபாலீஸ்வரி அம்மன் ஆலய விளக்குபூஜையில், பேஸ்புக் நேரலை மூலம் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே விளக்கேற்றி வழிபாடு நடத்தியது, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் உள்ள கபாலீஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழாவின் 7ஆம் நாள் நிகழ்ச்சியாக, நேற்றிரவு மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது.

மதுரை: நவராத்திரி விளக்குபூஜையில், பேஸ்புக் நேரலையில் பங்கேற்ற பெண்கள்

ஆண்டுதோறும் கோவிலின் அருகேயுள்ள மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த விளக்கு பூஜை, நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பேஸ்புக் நேரலை மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே பூஜையில் கலந்துகொண்டனர். இதனையொட்டி, விளக்கு பூஜையை ஒருங்கிணைந்து நடத்திய பேஸ்புக் நண்பர்கள் குழுவினர், முன்னதாகவே

மதுரை: நவராத்திரி விளக்குபூஜையில், பேஸ்புக் நேரலையில் பங்கேற்ற பெண்கள்

, பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர். மேலும், பூஜையில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் முகக்கவசமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து,

பெண்கள் தங்களது வீடுகளில் விளக்கை ஏற்றிவைத்து, பூஜை செய்து வணங்கினர்.

அதேபோன்று, முகக் கவசங்கள் அணிந்து வந்த பெண்கள் சிலர், சாலையில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து பூஜை செய்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் பேஸ்புகில் நேரலை செய்ததால், கிராமத்தினர் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறு பூஜைகளை கண்டுகளித்தனர்.

மதுரை: நவராத்திரி விளக்குபூஜையில், பேஸ்புக் நேரலையில் பங்கேற்ற பெண்கள்

விளக்கு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

ஊசி முனையில் இருந்து வேல் வாங்குதல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை, பூஜைக்கு பிறகு ஒவ்வொருவரும் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர்.

மதுரை: நவராத்திரி விளக்குபூஜையில், பேஸ்புக் நேரலையில் பங்கேற்ற பெண்கள்