Home அரசியல் சூர்யாவுக்கு இந்த வலியை தந்தது யார்?அமேசான் பின்னணியிலும் பாஜகவா?

சூர்யாவுக்கு இந்த வலியை தந்தது யார்?அமேசான் பின்னணியிலும் பாஜகவா?

நினைக்கையில் வலிக்கிறது… என்று சொல்லியதை அடுத்து சூர்யாவுக்கு இந்த வலியை தந்தது யார்? என்ற கேள்வி எழுந்தபோது, வலியை தந்தது பாஜகதான் என்றே பலரும் சொல்லி வந்தனர். ஆனால், உண்மை நிலவரம் வேறொன்றாக இருக்கிறது.

’’சூரரைப் போற்று திரைப்படம் விமானத் துறையை பற்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயம் எனபதாலும், உண்மையான விமானப் படை விமானங்களையும் பயன்படுத்தியதாலும் நாங்கள் ஏராளமான அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது. இன்னும் சில அனுமதிகள் நிலுவையில் இருப்பதால், இது போன்ற தருணத்தில நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு இப்படத்துக்கான காத்திருப்பு தவிர்க்க முடியாததாக ஆகிறது.

நம் இதயத்துக்கு நெருக்கமான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் கதை ஈர்க்கக் கூடியதாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இப்படத்தின் வெளியீடு தாமதமாகிறது.

எனினும், என்னுடைய நலம் விரும்பிகள் இப்படத்தை எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் எங்களிடம் வேறு மாற்றுவழி இல்லை என்பதை நினைக்கையில் வலிக்கிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதை அன்புடனும், நம்பிக்கையுடனும் நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்’’என்று நேற்று நடிகர் சூர்யா அறிக்கை விட்டதும், நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக சூர்யா கருத்து தெரிவித்ததால் பாஜக சூரரைப்போற்று படத்திற்கு தடை விதித்திருக்கிறது என்று ஒருதரப்பு சொல்லி வருகையில், இன்னொரு தரப்பும் சொல்லும் காரணங்களோ வேறொன்றாக இருக்கிறது.

முதல் இந்திய பெண் விமானியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட, ‘குஞ்சன் சக்சேனா’ சினிமாவில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்திருந்தார்.
ஆகஸ்ட்12ல் இப்படத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டது. இந்தப்படத்தில் இந்திய விமானப்படையை தவறாக சித்தரித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கும் இருக்கிறது.

இந்நிலையில், சூரரைப்போற்று இந்திய விமானப்படை வீரர் பற்றிய கதை என்பதால், இந்திய விமானப்படையிடம் தடையில்லாச் சான்று வாங்க வேண்டும் என்று அமேசான் நிறுவனம் கறாராக கூறிவிட்டதாம். படக்குழுவினால் உடனடியாக தடையில்லாச்சான்று வாங்க முடியாததால் திட்டமிட்டபடி சூரரைப்போற்று சினிமா வரும் அக்டோபர் 30ம் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அப்படி இருந்தும், தடையில்லாச் சான்று கேட்கும் விவகாரத்தின் பின்னணியிலும் பாஜக இருப்பதாகவே சிலர் சொல்லி வருகின்றார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வருக்கு நேரடித்தொடர்பு: தங்க கடத்தல் வழக்கில் பரபரப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் என்பதால் ஐந்து மாநிலங்களும் கூட்டணி, தொகுதி பங்கீடு என்று பரபரப்பாக இருக்கிறது....

“தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” – தூத்துக்குடி ஆட்சியர்

தூத்தக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென, ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டார்.

‘திமுகவுடன் கருணாஸ்’ உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

சட்டமன்ற தேர்தலில் கூட்டணியமைக்க திமுகவுடன் கருணாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏ கருணாஸ் இன்று...

சீனியர் கட்சிக்கே 4 தொகுதிகள் தானா?.. வைகோவை கதறவிடும் திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்து வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும்...
TopTamilNews