திருமாவளவன் பேசியது தவறு; காங்கிரசும், திமுகவும் ஏன் கண்டிக்கவில்லை – குஷ்பு கேள்வி

 

திருமாவளவன் பேசியது தவறு; காங்கிரசும், திமுகவும் ஏன் கண்டிக்கவில்லை – குஷ்பு கேள்வி

அனைத்து பெண்களும் விபச்சாரி என திருமாவளவன் பெண்களை பற்றி இழிவாக பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு கண்டிக்கதக்கது என்றார் குஷ்பு.

திருமாவளவன் பேசியது தவறு; காங்கிரசும், திமுகவும் ஏன் கண்டிக்கவில்லை – குஷ்பு கேள்வி

பெண்கள் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள் என இந்து மதம் கூறுவதாக தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் அதை கடுமையாகவும் கண்டித்திருந்தார்.

ஆனால், எல்லா பெண்களையும் விபச்சாரிகளாக திருமாவளவன் கூறிவிட்டார் என்று பெரும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், காலங்காலமாக பெண்களை இழுவு செய்யும் மனுதர்மம் எனும் சனாதனமே! அதுபற்றி நான் பேசியதை திரித்து பொய்யை பரப்புகிறது வக்கிர புத்திகொண்ட கும்பல். அவதூறுகளுக்கு அஞ்சேல். அணிதிரள்! ஆர்த்தெழு! ஆணாதிக்கம் அறுத்தெறி! ஆதிக்கம் வீழ்த்து என்று கூறி,

அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம்! ஆயிரம் தலைமுறைஇழிவைத் துடைப்போம்! காலம் காலமாகப் பெண்களை இழிவுசெய்யும் #மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி.. 24-10-2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில்.. தமிழ் நாடெங்கும் விசிகஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இந்நிலையில் , அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், பெண்களை திருமாவளவன் பேசியது சரியா? என்ற கேள்விக்கு, திருமாவளவன் பேசியது தவறு என்று சொன்னார். கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதற்கு காங்கிரசும், திமுகவும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேட்டார்.

மனு தர்மத்தில் பெண்களை அசிங்கப்படுத்தும் படி எதுவுமில்லை. அப்படியிருந்தால் திருமாவளவன் அதனை நிரூபிக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக பேசிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று திருமாளவனுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த பிரச்சனை பெரிதானதால்தான், இதை மறைப்பதற்காக அவர் அவசர அவசரமாக போராட்டத்தை அறிவித்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.