Home சினிமா வொர்க் அவுட் ஆச்சு... சூர்யா போட்ட கணக்கு!

வொர்க் அவுட் ஆச்சு… சூர்யா போட்ட கணக்கு!

‘எதிர்மறையாக’கத்தான் இந்த விவகாரத்தை எடுத்துக்கொள்வார்கள் என்று தெரிந்தேதான், ‘நேர்மறையாக’ என்று சூர்யா குறிப்பிட்டிருக்கிறார். அவர் போட்ட கணக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. எதிர்மறையாகவே இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டு, சூர்யாவை பாஜக பலி வாங்குகிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.


நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான சூர்யாவின் கருத்துகள் டெல்லி வரை ஒலித்தது. அதன் எதிரொலிதான் இது என்கிறார்கள்.

இம்மாத இறுதியில் ‘சூரரைப்போற்று’படம் ஓடிடியில் வெளியாவதாக இருந்த நிலையில், திட்டமிட்டபடி அக்டோபர் 30ம் தேதி இப்படம் வெளியாகாது என்று சூர்யா அறிவித்திருக்கிறார்.

படம் ரிலீஸ் ஆவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே சூர்யா இப்படி பரபரப்பு அறிக்கை வெளியிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. திட்டமிட்ட நாளில் படம் ரிலீஸ் ஆகாமல் போனால்தான் அதுகுறித்து பேசுவார்கள். ஆனால், எட்டு நாட்களுக்கு முன்பே சூர்யா சொல்லி இருப்பதால், எட்டு நாட்களுக்குள் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்திருக்கிறதா?அல்லது இப்படி அறிக்கை விட்டால் அது பரபரப்பாகி அனுமதி கிடைத்துவிடும் என்று நினைக்கிறாரா என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, இப்படத்தின் வெளியீடு தாமதமாகிறது. என்னுடைய நலம் விரும்பிகள் இதை அன்புடனும், நம்பிக்கையுடனும் நேர்மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன் என்று சூர்யா அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அறிக்கை மூலமாக ரசிகர்கள் எதிர்மறையாக சிந்திப்பார்கள் என்று தெரிந்துதான், ’நேர்மறையாக’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால், எதிர்மறையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்பதைத்தான் அப்படி சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.

‘’இதனால் ஆவேசம் கொண்டு நம் தோழர்கள் எல்லோரும் அங்கே குவிந்து கிடக்கும் கற்களை எடுத்து அவர்கள் மீது வீசக்கூடாது ‘’என்று தோழர் ஜீவா பேசும்போது, தோழர்கள் ஓடிச்சென்று கற்களை எடுத்து வீசிவிடுவார்கள். இன்னபிற தலைவர்களும் இதே போலத்தான், வீசக்கூடாது என்பார்கள். ஆனால், வீசிக்கொண்டிருப்பார்கள். செய்யக்கூடாது என்று சொன்னால் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்பதைத்தான் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். இது ஒரு அரசியல் கணக்கு. இந்த கணக்கு எல்லாம் சூர்யாவுக்கு தெரியாதா என்ன?

மாவட்ட செய்திகள்

Most Popular

டெக்கரேட்டர் தூக்கிட்டு தற்கொலை – கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை

தஞ்சாவூர் தஞ்சையில் டெக்கரேஷன் தொழில் செய்து வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி...

கடலூர், நாகை, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்றும் இதற்கு புரெவி என்று பெயரிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம்...

“மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்” – உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னரே பரப்புரையை...

வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் விலக்கு கோரி, லாரி உரிமையாளர்கள் மனு

தேனி லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து தளர்வு அளிக்கக் கோரி, தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனரக வாகன உரிமையாளர்கள் கோரிக்கை மனு...
Do NOT follow this link or you will be banned from the site!