Home அரசியல் பாஜகவினர் என்னை மிரட்டவில்லை; சபரிமாலா என்னை தத்தெடுக்கவும் இல்லை - மனம் திறந்த மாணவர் ஜீவித்குமார்

பாஜகவினர் என்னை மிரட்டவில்லை; சபரிமாலா என்னை தத்தெடுக்கவும் இல்லை – மனம் திறந்த மாணவர் ஜீவித்குமார்

அரசு பள்ளியில் படித்த தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த ஜீவித்குமார் நீட் தேர்வில் 720க்கு 664 மதிப்பெண் பெற்று, இந்திய அளவில் அரசுப்பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் என்று பெருமையை பெற்றார். ஜீவித்குமாரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தத்தெடுத்து நீட் தேர்வு எழுத வைத்ததாகவும், ஜீவித்குமார் சபரிமாலாவின் பிள்ளை என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் சொன்னவர், பாஜகவினர் அவருடையை வீட்டுக்கு சென்று பொன்னாடை அணிவித்துவிட்டு அவரை மிரட்டியுள்ளனர் என்று கூறியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட மாணவர் ஜீவித்குமார் இதை மறுத்துள்ளார்.

திண்டிவனம் ஜக்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சபரிமாலா. வைரபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தவர், நீட் தேர்வு விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட குழுமூர் அனிதாவின் நிலையைக் கண்டு கொதித்து எழுந்து, தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருவதாக அறிவித்திருந்தார் . பெண்கள் விடுதலை இயக்கத்தையும் துவக்கி நடத்தி வருகிறார்.

மாணவர் ஜீவித்குமார் அதிக மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்றதற்கு தான் தான் காரணம் என்று சபரிமாலா சொல்லி இருப்பதுதான் தற்போது சர்ச்சை ஆனது. ’’தேனி மாவட்டம் சில்வார்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அருள்முருகன் என்னிடம் ஜீவித்குமார் பற்றி கூறியிருந்தார். நான் அங்கு போய் பள்ளி முன்பாக நின்று, ‘உன்னை பிச்சை எடுத்தாவது படிக்க வைக்கிறேன்’னு சொன்னேன். அதே மாதிரி, சில்வார்பட்டி ஆசிரியர்களுடன் சேர்ந்து நாமக்கலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படிக்க வைத்தோம்’’என்று சொன்னதோடு, ஜீவித்குமாரை தான் தத்தெடுத்ததாகவும், அவர் தனக்குபிள்ளை என்றும் சொன்னதோடு அல்லாமல், ஜீவித்குமாரை பாஜகவினர் மிரட்டியதாகவும் சொல்லியதற்கு மாணவர் ஜீவித்குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், ’’இந்த பையனுக்கு நான் ஹெல்ப் பண்றேன்னு ஸ்கூல் நுழைவு வாயில் முன்பு ஒரு வீடியோ எடுத்தாங்க. அந்த வீடியோவில், நீ நீட் தேர்வுல பாஸ் ஆகிடுவியா நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு கேட்டார். பாஸ் பண்ணிடுவேனு நான் சொல்லி இருந்தேன். அந்த வீடியோவை முகநூலில் போட்டிருந்தாங்க. அந்த வீடியோவை பார்த்த அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் எனக்கு சபரிமாலா மேடம் மூலமாக உதவி செய்தார். அதனால அவுங்களுக்கு ரொம்ப நன்றி. தன்னுடையை சக்தியை மீறி என்னை படிக்க வைக்குறேன்னு சொன்னது என்னோட பெற்றோர்தான். அதனால அவுங்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

என்னோட வெற்றிக்கு காரணம் ஒருத்தர்தான்னு சொல்ல முடியாது. நான் பார்த்தவங்க, நான் பார்க்காதவங்க நிறையபேரு எனக்காக வேண்டிக் கொண்டிருக்காங்க. ஹெல்ப் பண்ணியிருக்காங்க. எல்லோருக்குமே நான்ரொம்ப தேங்க் சொல்லிக்குறேன். கட்சிக்காரர்கள் என்னை வந்து மிரட்டுனதா சபரிமாலா மேடம் ஒரு வீடியோ போட்டிருந்தாங்க. அவுங்க இப்படி ஒரு வீடியோ எடுத்து போட்டிருக்காங்கங்கிற விசயமே எனக்கு தெரியாது. இப்பத்தான் சமூக வலைத்தளங்கலில் நானே போய் பார்க்கும்போதுதான் தெரியுது. அப்டி எல்லாம் ஒண்ணுமில்ல. யாரும் வந்து மிரட்டல.

sabarimala


ரிசல்ட் வந்த மறுநாள் எனக்கு நிறைய பேர் வந்து வாழ்த்து சொன்னாங்க. பிஜேபியில இருந்தும் வந்து வாழ்த்து சொன்னாங்க. ரொம்ப சந்தோசமாக இருந்துச்சு. எல்லோருக்குமே நன்றி சொல்லிக்குறேன்.

சபரிமாலா மேடம், என்னை தத்தெடுத்ததா சொல்லி இருந்தாங்க. அவுங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும். நான் எங்க அப்பா, அம்மாவுக்குத்தான் மகன். மற்றபடி எனக்கு உதவி செய்த ஆசிரியர்கள் எல்லோரும் அறிவுத்தாயார்தான். எங்க அப்பா, அம்மா யாருக்கும் என்னை தத்துக்கொடுக்கல. திரும்பவும் சொல்றேன் நான் எங்க அப்பா அம்மாவுக்குத்தான் மகன். டீச்சர்ஸ் எல்லோரும் எனக்கு அறிவுத்தாயாக இருந்திருக்காங்க. சபரிமாலா மேடத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். என்னைப்பற்றி இதுமாதிரி தவறாக பேசவேண்டாம்.’’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews