Home அரசியல் நரித்தனமும் நப்பாசையும் எடுபடாது! எச்சரிக்கும் மாஜி திமுக அமைச்சர்

நரித்தனமும் நப்பாசையும் எடுபடாது! எச்சரிக்கும் மாஜி திமுக அமைச்சர்

சமூக வலைதளங்களில் பொய் புகார்களைப் பரப்புவதால் நான் அஞ்சமாட்டேன். ஆதாயம் தேடிவிடலாம் என்ற நரித்தனமும், நப்பாசையும் எடுபடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் திமுக அமைச்சரும், திமு கழக துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி

இது குறித்து அவரது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

‘’திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, சட்டமன்ற உறுப்பினராகிய நான், தொகுதி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இதுதொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றாகத்தெரியும். தொகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க.ஆட்சியில் செயல்படுத்தி இருக்கின்றேன்.

இந்நிலையில் கடந்த10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால் பல்வேறு திட்டங்களைச்செயல்படுத்த ஆளும் அ.தி.மு.க. அரசு தவிர்த்துவருகிறது. இருந்தபோதிலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்தபணத்தில் வளர்ச்சிப்பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன். மேலும் பிரதான குடகனாறு நீர்ப்பங்கீடு பிரச்சனையில் முத்தரப்பு விவசாயிகளின் நலனுக்காகவும், பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைக்காகவும் முழுவீச்சில் தொடர்ந்து பணியாற்றிவருகின்றேன்.

அந்தக் காலத்தில் கன்னிமார் கோவில் அருகே நரசிங்கபுரம் தெற்குபகுதிக்கும், ஆத்தூர்ராஜவாய்க் காலுக்கும், குடகனாற்றுக்கும் -தண்ணீர் செல்வதற்காக கற்களை வைத்து அணைபோன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் முன்னோர்கள். இந்நிலையில் சமீபகாலமாக நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், ஆத்தூர் ராஜவாய்க்கால், குடகனாறு விவசாயிகள் ஆகிய மூன்று தரப்பிற்கும் இடையேதண்ணீர் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிக்கல் இருந்துவருகிறது. அதுவும் கற்களால் ஆன அணையில் பொதுப் பணித்துறைஅதிகாரிகள் சிமிண்ட்போட்டு அடைத்ததால் ஏற்பட்ட சிக்கல். அந்தச்சிக்கலைத் தீர்த்து மூன்றுதரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒரு தீர்வை ஏற்படுத்தப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதன் விளைவாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அவர்களுக்குள் சில முக்கிய முடிவுகளை எடுத்து அறிவித்தார்கள். அதனை மூன்று தரப்பும் ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து இனிவரும் காலங்களில் தண்ணீர்பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக நிரந்தர தீர்வை வலியுறுத்தினேன்.

விவசாயிகளும்அதனை வழிபொழிந்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஒரு வல்லுநர்குழுவை அமைத்ததுஅரசு. அந்தக் குழு, தண்ணீர் பகிர்வதில் பிரச்சினைக்குரிய இடத்தைநேரில் சென்று ஆய்வுசெய்தது. மூன்று தரப்புவிவசாயிகளிடம் கருத்துக்கேட்டு தங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந்நிலையில் மாவட்டஆட்சியர் அந்த அறிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசென்று உடனடியாக வல்லுநர் குழு கூறியுள்ள தீர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தநடவடிக்கையை பருவமழை துவங்குவதற்கு முன் செயல்படுத்தவேண்டும். தண்ணீர் பகிர்வதில் உள்ள எதார்த்த நிலை இதுதான். இது தண்ணீரை பயன்படுத்தும் விவசாயி களுக்குத் தெரியும். உண்மை இப்படியிருக்க, முதலில் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் மூலமாகத் தண்ணீர்செல்லும்போது அந்தப்பகுதியில் என்னுடைய விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதாகவும் மற்றும் எனது தொழிற்சாலைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதாகவும் கூறி புரளியைகிளப் பினார்கள். இதுமுற்றிலும் பொய்யானதகவல்.

நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தண்ணீர்செங்காட்டான்    குளத்துடன்  முடிவடைகிறது.  மிதமிஞ்சிய    நீர்வரத்துகாலத்தில் மட்டுமே  குடிநீர் தேவைக்காக நிலக்கோட்டை  பகுதிகளுக்குசெல்வது அனைத்து விவசாய    தரப்பினரும் அறிந்த உண்மை. அதைத்தாண்டி  வத்தலக்குண்டு போவதற்கு  வாய்க்கால் இல்லை  என்ற  எதார்த்த உண்மையை மறைத்துப்பொய்     பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.

 அமைதி பேச்சுவார்த்தைக்குப்   பிறகு,   குடகனாற்றில்  தண்ணீர் வரும்போது,  அனுமந்தராயன்கோட்டை  ‘  பகுதியில்  எனக்கு  1000  ஏக்கர் நிலம்  இருப்ப  தாகவும்,  அதற்காகத்  தண்ணீரை கொண்டு  செல்வதாகவும்,  அபாண்ட குற்றச்சாட்டுக்களை  சமூக  வலை  தளங்களில்     சிலர்     பரப்பி வருகிறார்கள்.

பிரச்சனைக்குரிய தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் நரசிங்கபுரம் தெற்கு வாய்க்கால் பகுதியிலோ அனுமந்தராயன்கோட்டை பகுதியிலோ எனக்கு ஒருசென்ட் நிலம் கூட இல்லை என்பது தான்உண்மை. அந்தப் பகுதிகளில் பிரச்சனைக்குரிய தண்ணீரை நான் எனது நிலத்திற்காக பயன்படுத்தியதை யாராவது ஒருவர் நிரூபித்தாலும் அரசியலை விட்டே விலகிக் கொள்ளத் தயார். இதனை சவாலாகச் சொல்கிறேன்.

மக்கள் பிரச்சினையில் தொடர்ந்து பங்காற்றிவரும் என்னை, மக்கள்மத்தியில் செல்வாக்குடன் திகழும் என்னைப்போட்டியாக நினைப்பவர்கள், அவர்களும் மக்கள் பணியில் கவனம்செலுத்தட்டும். அதனைவிடுத்து, சமூக வலைதளங்களில் பொய் புகார்களைப் பரப்புவதால் நான் அஞ்சமாட்டேன்.

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தொகுதிக்காக நான் எடுக்கும் முயற்சிகளை மக்கள் நன்கு அறிவார்கள். என்மீது குற்றம் சுமத்துபவர்கள் ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அவதூறுகளையும், பொய் பிரச்சாரத்தினையும் முன்னிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திசைதிருப்பி அதன்மூலம் ஆதாயம் தேடிவிடலாம் என்ற நரித்தனமும், நப்பாசையும் எடுபடாது என்பதை இதன்மூலம் தெரிவிப்பதோடு ஆதாரமற்ற அபாண்ட குற்றச்சாட்டுகளை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ‘’

மாவட்ட செய்திகள்

Most Popular

புரெவி புயல்: ‘வெளியே செல்லாதீர்’ என ராமநாதபுரம் மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

‘வெளியே செல்லாதீர்கள்’என ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையில்...

மல்டி பிளக்ஸ் திரையரங்கு இனி இரண்டு, மூன்று சிறு திரையரங்குகளாக மாறும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களின் பதவி ஏற்பு நிகழ்வு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர், துணை தலைவர்கள், கெளரவ செயலாளர்கள்,...

அரசுப்பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் படுகாயம்

திருப்பத்தூர் திருப்பத்தர் அருகே முன்னால் சென்ற அரசுப்பேருந்து மீது, மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெல்லக்கல்நத்தம்...

தேனு இல்ல சர்க்கரை பாகு! கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் சிக்கிய பதஞ்சலி!!

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் பதஞ்சலி, டாபர், சாண்டு ப்யூர்( Zandu Pure) உள்ளிட்ட 10 நிறுவனங்களின் தயாரிப்புகள் தோல்வியை தழுவியுள்ளன.
Do NOT follow this link or you will be banned from the site!