Home உலகம் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு - விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு – விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸ் ஆகிறது. இதில், விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முயன்று வருகிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ்.

பெங்களூரைச்சேர்ந்த ஏ.எம்.ஆர்.ரமேஷ், 2006ம் ஆண்டில் சயனைட் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் பரபரப்பாக அடி எடுத்து வைத்தார். 2007ல் அதை ‘குப்பி’யாக தமிழிலும் தந்தார். ராஜீவ் கொலையாளிகள் பற்றிய கதை என்பதால் இந்த படம் பெரும் பரப்பரைப்பை ஏற்படுத்தி இருந்தது.

2013ல் சந்தனமரக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை கதையை ‘வனயுத்தம்’என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். அவர் இப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிசாக எடுக்க தீவிரம் காட்டி வருகின்றார்.

இப்படத்தில் பிரபாகரன் கேரக்டரில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க அவர் முயன்றுவருவதாக தெரிகிறது.

விஜய் சேதுபதி

இலங்கை அரசுக்கு ஆதரவாளரான, முத்தையா முரளிதனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு இருந்து வந்ததால், அப்படத்தில் இருந்து விலகியுள்ளார் விஜய்சேதுபதி.


முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்புக்கும் ஆளானதால், அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கிலாவது பிரபாகரனின் வெப் சீரிஸ் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வாய்ப்பிருக்கிறது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews